‘உங்களுக்கு இங்க வேலை இல்ல’.. ஏன்னு கேட்டதுக்கு ஓனர் சொன்ன அதிர்ச்சி காரணம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்புதிய வேலைக்காக 3000 கிலோமீட்டர் பயணம் செய்து சென்ற நபரை 2 மணி நேரத்திலேயே வேலையை விட்டு தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் ஹமிஷ் கிரிஃப்பின் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் டாஸ்மனியாவில் உள்ள வேறொரு கேளிக்கை விடுதியில் சற்று கூடுதலாக அதே மேலாளர் பதவி கிடைத்துள்ளது.
இதனை அடுத்து குயின்ஸ்லாண்டில் உள்ள தனது வீட்டை காலி செய்துவிட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் சுமார் 3000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து டாஸ்மனியா சென்றுள்ளார்.
வேலைக்கான நேர்காணல் ஆன்லைனில் நடந்ததால் ஹமிஷ் கிரிஃப்பினின் முகத்தை மட்டுமே விடுதி உரிமையாளர் பார்த்துள்ளார். இதனை அடுத்து ஹமிஷ் கிரிஃப்பினை நேரில் பார்த்த உரிமையாளர், ‘இவர் இந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்’ என கூறியுள்ளார். ஏன் என்று ஹமிஷ் கிரிஃப்பின் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு குண்டாக இருப்பதால், எப்படி குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியுமா?’ எனக் கூறி, வேலைக்கு சேர்ந்த 2 மணிநேரத்திலேயே அவரை நீக்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்து போன ஹமிஷ் கிரிஃப்பின் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளார். 8 வருட பணி அனுபவம் கொண்ட ஹமிஷ் கிரிஃப்பின் தன் குடும்பம் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தன்னை நிராகரித்த கேளிக்கை விடுதி மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் குண்டாக இருப்பதை காரணம் காட்டி வேலை பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்