‘Lockdown-ஐ மீறி வந்து.. போலீஸை பார்த்ததும் பம்பிய நபர்!’.. 'அனுமதி சான்றிதழில் எழுதியிருந்த காரணத்தை பார்த்து'.. ‘ஒரு கணம்’ உறைந்துபோய் நின்ற போலீஸார்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய வேலைகள், அத்தியாவசிய தேவைகள் போன்ற காரணங்களுக்காக மட்டும், வெளியில் செல்வதற்கான உரிய சான்றிதழ் பெற்று மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் போன்ற நடைமுறை பிரான்சிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

‘Lockdown-ஐ மீறி வந்து.. போலீஸை பார்த்ததும் பம்பிய நபர்!’.. 'அனுமதி சான்றிதழில் எழுதியிருந்த காரணத்தை பார்த்து'.. ‘ஒரு கணம்’ உறைந்துபோய் நின்ற போலீஸார்!

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை Lannion(Cotes d Armor) நகரில் போலீசார் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கார் ஒன்றின் பின்னால் 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், மறைந்து இருப்பதை பார்த்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் அந்த நபரை நெருங்கி சென்று அவரிடம், “வெளியில் செல்வதற்கான அனுமதி பத்திரம் உங்களிடம் உள்ளதா?” என்று கேட்டுள்ளனர். உடனே அந்த நபரும் தன்னுடைய பயணர் சான்றிதழுக்கான அனுமதிப் பத்திரத்தை தந்துள்ளார். அதைக் கண்ட போலீசார் அந்த அனுமதிப் பத்திரத்தில் அந்த நபர் சொல்லியிருந்த காரணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அதில் ஒருவரை தாக்குவதற்காக வெளியில் செல்வதாக அந்த நபர் எழுதியிருந்தார். இதை படித்துப்பார்த்த போலீசார் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அந்த அனுமதிப்பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த பெயர், முகவரி மற்றும் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரம் ஆகிய அனைத்தும் சரியாக இருந்தது மட்டுமின்றி அந்த நபரை மேற்கொண்டு விசாரித்ததில், அவ்வழியாக வரவிருக்கும் ஒருவரை தாக்குவதற்காக அவர் அங்கு காத்திருந்ததாகவும், அவருடைய அனுமதிப் பத்திரத்தில் எழுதியிருக்கும் காரணம் உண்மைதான் எனவும் போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும் மடித்து வைக்கக்கூடிய கத்தி அவரிடம் இருந்ததும், அவர் மது குடித்து இருப்பதும் தெரிய வந்தது.

இதனால் அவரை அழைத்து சென்ற  போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் 135 யூரோ அபராதம் விதித்து அவரை திருப்பி அனுப்பினர். அந்த நபர் விடுவிக்கப் பட்ட போதிலும், விசாரணைக்காக விரைவில் மீண்டும் அவர் அழைக்கப்படுவார் என போலீசார் குறிப்பிட்டனர்.

மற்ற செய்திகள்