Naane Varuven M Logo Top
PS 1 M Logo Top

உலகத்தின் மிகப்பெரிய பூ.. ஆனா ரொம்ப டேஞ்சர்.. காட்டுக்குள்ள போன நபர் விஷயம் தெரியாம இதுக்கு பக்கத்துல போய்ட்டாரு.. ஜஸ்ட் மிஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காடுகளுக்குள் ட்ரெக்கிங் சென்ற சுற்றுலாவாசி ஒருவர் எதேச்சயாக இந்த மலரை கண்டுபிடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த மலரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

உலகத்தின் மிகப்பெரிய பூ.. ஆனா ரொம்ப டேஞ்சர்.. காட்டுக்குள்ள போன நபர் விஷயம் தெரியாம இதுக்கு பக்கத்துல போய்ட்டாரு.. ஜஸ்ட் மிஸ்..!

Also Read | "நீ வந்து கூட்டிட்டு போய்டு".. மனைவி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல கணவனுக்கு தெரியவந்த திடுக்கிடும் உண்மை..!

இந்தோனேஷியாவில் சுற்றுலா சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த காடுகளுக்குள் ட்ரெக்கிங் சென்றிருக்கிறார். அப்போது காட்டுக்கு நடுவே வித்தியாசமான பூ ஒன்றை பார்த்திருக்கிறார். அலங்காரம் செய்ய உதவும் பிளாஸ்டிக் பூ போல அது இருந்தாலும், அது உண்மையான பூ தான் என்பது சில நிமிடங்களில் அவருக்கு தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், அந்த பூவினை புகைப்படம் எடுத்து அவர் சோசியல் மீடியாவில் பதிவிட கொஞ்ச நேரத்தில் அந்த புகைப்படம் வைரலாகிவிட்டது. காரணம் அந்த பூ வின் வித்தியாசமான தன்மை தான்.

உலகின் மிகப்பெரிய பூ

அப்படி அந்த நபர் கண்டறிந்த பூ-வில் என்ன தான் இருக்கிறது. அதுதான் உலகின் மிகப்பெரிய பூவான ரஃபெல்சியா அர்னால்டி (Raffelsia Arnoldii). இதனை கார்பஸ் மலர் என்றும் அழைக்கிறார்கள். இந்த வினோத மலரை அறிவியல் உலகில் அமார்போஃபாலஸ் டைட்டானம் என அழைக்கின்றனர். இது அரேசியே மலர் குடும்பத்தைச் சார்ந்தது. சுமார் 3 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த மலர் சராசரியாக 7 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்கிறார்கள் தாவரவியல் வல்லுநர்கள்.

Man finds the largest flower in the world Rafflesia Arnoldii

இது அதிகமாக இந்தோனேசியா மற்றும் சுமத்ரா தீவுகளில் அமைந்துள்ள மலைக் காடுகளில் வளர்கின்றன. 1878 ஆம் ஆண்டு இந்தப் பூவை இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர்  கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு உலகத்தில் உள்ள பல்வேறு முக்கிய கல்லூரிகளில் இந்த வினோத மலர் செடியை வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர் தாவரவியலாளர்கள்.

துர்நாற்றம்

இத்தனை வரலாறுகளை தன்னிடத்தே கொண்ட இந்த அரிய மலர் பூக்கும் போது கடுமையான துர்நாற்றம் வீசும். இந்த மலர் பூக்கும் வேளையில் சடலத்தை போல வாசனை வரும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த பூ இரண்டு நாட்களுக்கு மட்டுமே பூத்திருக்கும் எனவும் அப்போது கடுமையான துர்நாற்றம் வீசும் எனவும் கூறும் ஆய்வாளர்கள், இது பூச்சிகளை கவர்ந்திழுக்க செய்வதாகவும் கூறுகின்றனர்.

Also Read | ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்.. பார்க்கிங் லைன்-அ விட்டு 3 இஞ்ச் தள்ளி நின்ன கார்.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் அதிர்ந்துபோன உரிமையாளர்..!

LARGEST FLOWER, RAFFLESIA ARNOLDII, LARGEST FLOWER IN THE WORLD

மற்ற செய்திகள்