தோட்டத்தில் குழி தோண்டிய நபர்.. உள்ளே தெரிஞ்ச மர்ம சுவர்.. காரணம் தெரிந்ததும் உறைஞ்சு போயிட்டார்.!
முகப்பு > செய்திகள் > உலகம்உயிரிழந்த தனது நாயை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டிய போது நபர் கண்ட விஷயம் ஒன்று, அவரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் வாழ்ந்து வரும் நபர் ஒருவர், சமீபத்தில் தனது வீட்டு தோட்டத்தில் குழி தோண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இவரது 16 வயது நாய் திடீரென இறந்ததால், அதன் உடலை அடக்கம் செய்வதற்காக இந்த குழியை அவர் தோண்டி உள்ளார். அப்போது சுமார் 4 அடி ஆழத்திற்கு குழி எடுத்த போது, கடும் பரபரப்பு சம்பவம் ஒன்று அந்த நபருக்கு காத்திருந்துள்ளது. தோட்டத்திற்கு அடியே தோண்டப்பட்ட குழிக்குள் சுவர் ஒன்று தென்பட்டுள்ளது.
மிகவும் விசித்திரமான வகையில் அந்த சுவர் இருந்ததாக கூறப்படும் நிலையில், எப்படி அது தோட்டத்தில் இருக்கிறது என்பதைக் கண்டு அதனை தோண்டிய நபர் உச்சகட்ட குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும், இந்த சுவர் தனது வீட்டுடன் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட எந்தவொரு விதத்திலும் தொடர்பு இல்லை என அந்த நபர் குறிப்பிடும் நிலையில், தனது தோட்டத்திற்கு அடியில் இப்படி ஒரு இடம் இருந்தது தொடர்பான பதிவுகள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் கூறி உள்ளார்.
தோட்டத்தில் குழி தோண்டிய இடத்தில் சுவர் தென்படும் புகைப்படத்தை Reddit தளத்தில் பகிர்ந்து சுவர் பற்றி யாருக்காவது தெரியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். அதே போல, அங்கே ஒரு அறை இருந்தால் தொடர்ந்து தோண்டலாமா என்ற கேள்வியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மர்மமான நிலத்தடி சுவரை காணும் நெட்டிசன்கள் பலரும் ஒரு நிமிடம் உறைந்து போயுள்ளனர்.
இது என்ன சுவராக இருக்கும் என ஒரு பக்கம் யோசித்து வந்தாலும், மற்ற சிலர் அதிலிருந்து ஒதுங்கி இருக்குமாறும் அந்த நபரை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சிலர், அதற்குள் அறை இருந்தால் அதனை தோண்டி ஒரு நிலத்தடி தளத்தை உங்களுக்காக உருவாக்கிக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக, பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த நிலையில், கடைசியில் இது என்ன என்பது பற்றியும் குழி தோண்டிய நபர் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பழைய மாடலில் உருவாக்கப்பட்ட உலர்ந்த கிணறு என்பதும், தேவையற்ற நீரை வெளியேற்றும் நிலத்தடி அமைப்பு இது என்பதும் தெரிய வந்துள்ளது.
முன்பொரு காலத்தில் இந்த உலர்ந்த கிணறு தேவையற்ற நீரை வெளியேற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | App மூலம் பழக்கம்.. மகனுக்காக இரண்டாம் திருமணம்.. "கல்யாணம் ஆகி ஒரு இரவை தாண்டுனதும் அரங்கேறிய அதிர்ச்சி!!
மற்ற செய்திகள்