"இது எப்படி இங்க, 400 வருஷம் பழமை ஆனதாம்".. வீட்டு சமையல் அறையை புதுப்பிச்சப்போ இளைஞர் கண்ட ஆச்சரியம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சமையல் அறையை புதுப்பித்து கொண்டிருந்த சமயத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்துள்ள விஷயம், தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

"இது எப்படி இங்க, 400 வருஷம் பழமை ஆனதாம்".. வீட்டு சமையல் அறையை புதுப்பிச்சப்போ இளைஞர் கண்ட ஆச்சரியம்!!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | லாட்டரியில் பல கோடி ஜெயிச்ச பெண்.. கொஞ்ச நாளிலேயே கணவருக்கு தெரிய வந்த அதிர்ச்சி.. "மனுஷன் நொறுங்கி போய்ட்டாரு"..

வடக்கு இங்கிலாந்தில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லூக் பட்வொர்த். இவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். தனது வீட்டில் உள்ள சமையல் அறையை இவர் புதுப்பித்து கொண்டிருந்த சமயத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான சுவர் ஓவியங்களை கண்டுபிடித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

கடந்த 1660 ஆம் ஆண்டுக்கு முந்தைய சுவர் ஓவியத்தை யார்க் நகரத்தில் அமைந்துள்ள மிக்லேகேட் என்னும், பகுதியில் உள்ள தனது வீட்டின் சுவரில் அவர் கண்டுபிடித்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு தனது வீட்டின் சமையல் அறையில் புதுப்பிக்கும் பணி நடந்த போது அங்கிருந்த அலமாரிக்கு அடியில், அழகான வண்ணங்கள் விக்டோரியன் காலத்து வால்பேப்பர் அடுக்குகளுடன் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Man finds 400 yr old painting while renovate house kitchen

Images are subject to © copyright to their respective owners.

இது போன்ற ஓவியங்களை கண்டுபிடிப்பதில் தான் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், இனி வருங்கால சந்ததியினருக்காக அவற்றை பாதுகாக்க விரும்புவதாகவும் லூக் பட்வொர்த் கூறி உள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்டுபிடிப்புகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்பிய லூக், Historic England-ஐ தொடர்பு கொள்ள அவர்கள் பல்வேறு தகவல்களை கூறி உதவி செய்துள்ளது.

Man finds 400 yr old painting while renovate house kitchen

Images are subject to © copyright to their respective owners.

கவிஞர் பிரான்சிஸ் க்வார்லஸ் என்பவர், 1635 ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தின் காட்சிகள் இடம்பெற்றிருப்பதை ஆராய்ந்து தகவல்களை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. வீட்டின் சமையல் அறையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேசிய முக்கியத்துவம் பெற்ற ஓவியங்கள் இருந்தது பலரையும் மிரண்டு போகவும் வைத்துள்ளது.

Also Read | தாஜ்மஹாலை காண ஸ்ட்ரெச்சரில் வந்த 85 வயது மூதாட்டி.. கல்லையும் கரைய வைக்கும் உருக்கமான பின்னணி!!

MAN, PAINTING, HOUSE KITCHEN

மற்ற செய்திகள்