ராத்திரி மது போதையில் இருந்த வாலிபர்.. "நடுவுல கண் முழிச்சு பாத்தப்போ, பெட்டிக்குள்ள இருந்துருக்காரு.." நடுங்க வைத்த பின்னணி
முகப்பு > செய்திகள் > உலகம்வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஒரு விழாவுக்கு சென்று மது அருந்திய நிலையில், கண் திறந்து பார்த்ததும் அவர் கண்ட சம்பவம், கடும் பீதியில் அவரை உறைய வைத்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவை சேர்ந்தவர் விக்டர் ஹியூகோ மிகா அல்வரேஸ். இவர் சமீபத்தில் பழங்குடி மக்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிற்கு போனதாக கூறப்படுகிறது.
அவரது நண்பர் ஒருவரின் அழைப்பில், விக்டர் அங்கே சென்றதாக கூறப்படும் நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் போதை அதிகமாகவே, விக்டருக்கு அதன் பின்னர் நடந்தது எதுவும் நினைவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இரவு நேரத்தில் தனது வீட்டின் கட்டிலில் இருப்பதாக கருதி, கழிவறை செல்ல கண் திறந்து பார்த்த விக்டர், ஒரு நிமிடம் ஆடி போயுள்ளார். அப்படி என்ன நடந்தது என்பது பற்றி, விக்டர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நாங்கள் மது அருந்திய பிறகு, நடனமாட சென்றோம். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே எனக்கு நினைவில் இல்லை. இதன் பின்னர், கழிவறை செல்வதற்ககாக நான் கண் திறந்த போது, என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்பது நினைவில் இருக்கிறது. இதன் பின்னர் அனைத்தும் இருட்டாகவே தெரிந்தது.
என் முன்னால் இருந்த கண்ணாடி ஒன்றை நான் உடைத்த போது, அழுக்கு உள்ளே நுழைய ஆரம்பித்தது. இதன் பின்னர் அதிலிருந்து என்னால் வெளியேற முடிந்தது. அப்போது தான் சவப் பெட்டியில் வைத்து நான் புதைக்கப்பட்டிருப்பது தெரிந்தது" என விக்டர் தெரிவித்துள்ளார். பழங்குடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் விக்டர், சவப்பெட்டிக்குள் கண் திறந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
அதே போல, Achacachi என்னும் பகுதியில், நிகழ்ச்சி நடந்ததாக விக்டர் குறிப்பிடும் நிலையில், அங்கிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள El Alto என்னும் பகுதியில், அவர் சுற்றித் திரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்க, மது போதையில் விக்டர் இருந்ததாக கூறி, தெளிவான பின் வரவும் அவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், தான் சவப்பெட்டியில் இருந்து காயங்களுடன் வெளியே தப்பித்து வந்தேன் என்றும், தற்போது போதை எதுவும் இல்லை என்றும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்