Viruman Mobiile Logo top

மயங்கி ஸ்டியரிங்கில் விழுந்த கார் ஓட்டுநர்.. "அடுத்த 25 கி.மீட்டர் தூரத்துக்கு இதான் நடந்துச்சு.." சாலையில் நடந்த 'அற்புதம்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் ஒரு விஷயமாகும்.

மயங்கி ஸ்டியரிங்கில் விழுந்த கார் ஓட்டுநர்.. "அடுத்த 25 கி.மீட்டர் தூரத்துக்கு இதான் நடந்துச்சு.." சாலையில் நடந்த 'அற்புதம்'!!

அப்படி இருக்கும் நிலையில், நம்மைச் சுற்றியுள்ள ஆட்டோமொபைல்ஸ், மொபைல் போன்கள், இணையதளம் என அனைத்திலுமே நாட்கள் செல்ல செல்ல புதுவிதமான அப்டேட்டுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில், கார் ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பொதுவாக, காரில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் போது, நிச்சயமாக ஓட்டுனருக்கு தூக்கம் கண்ணை கட்ட தான் செய்யும். அப்படி இருக்கும் போது, அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பலரும் வாகனம் ஓட்டுவார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், நபர் ஒருவர் காரை ஓட்டிக் கொண்டு செல்ல அதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பெல்ஜியம் பகுதியில் உள்ள லீயூவன் என்னும் பகுதியில், கார் ஓட்டுநர் மயங்கிய நிலையில் இருக்க, கார் தனியாக செல்வதை சக வாகன ஓட்டி ஒருவர் பார்த்துள்ளார். இதனைக் கண்டதும் அதிர்ந்து போன அவர், உடனடியாக இது பற்றி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இயங்கிக் கொண்டிருந்த காரை ஒரு வழியாக நிறுத்தி சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, காருக்குள் சுமார் 40 வயதை அடைந்த நபர் மயக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். தொடர்ந்து அந்த நபர் மது அல்லது போதை பொருட்கள் ஏதேனும் எடுத்துக் கொண்டாரா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

man fell unconscious while driving car and then drive

தொடர்ந்து இது பற்றி விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு இன்னொரு அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. அதாவது லீயூவன் இடத்திற்கு அந்த கார் வருவதற்கு முன்பாகவே, அதாவது சுமார் 25 கிலோமீட்டருக்கு முன்பாகவே அந்த நபர் மயக்கமடைந்து ஸ்டியரிங்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த ரெனால்ட் காரில் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் அசிஸ்ட் உள்ளதால், எந்த தடங்கலும் இன்றி அந்த கார் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கார் சென்று கொண்டிருந்ததை பார்த்த மற்ற கார் ஓட்டி ஒருவரும் ரெனால்ட் கார் சீரான வேகத்தில் பயணித்து, இடமிருந்து வலமாக நகர்ந்து சென்றதை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த காரில் இருந்த தொழில்நுட்பம் காரணமாக மயங்கிய நிலையில் ஓட்டுநர் இருந்த பிறகும், எந்தவித ஆபத்தும் இன்றி, அந்த கார் நகர்ந்து போய் கொண்டிருந்த சம்பவம், மிகப் பெரிய அளவில் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

CAR, DRIVER, POLICE

மற்ற செய்திகள்