'காலிங் பெல்லை அடித்த கணவன்'... 'கதவை திறந்த மனைவி'...'கடவுளே, நீயா இது'... ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போன கணவன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் தனது மனைவியைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார்.

'காலிங் பெல்லை அடித்த கணவன்'... 'கதவை திறந்த மனைவி'...'கடவுளே, நீயா இது'... ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போன கணவன்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாகப் பல நாடுகளில் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. அதோடு பல நாடுகளின் எல்லைகளும் மூடப்பட்டது. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் Darren Hunt என்பவர் மாட்டிக் கொண்டார். இதனால் தனது தாய் நாடான பிரிட்டனுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளார். தற்போது நிலைமை ஓரளவு சரியான நிலையில் அவர் மீண்டும் தனது தாய் நாட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.

ஆசை ஆசையாகத் தனது வீட்டிற்கு வந்த Darren, சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக வீட்டின் காலிங் பெல்லை அவர் அடித்துள்ளார். அப்போது அவரது மனைவி Abigali கதவைத் திறந்துள்ளார். அவர் கதவைத் திறந்த அடுத்த கணமே, Darren Hunt ஒரு நிமிடம் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து நின்றுள்ளார். மிகவும் உடல் எடை அதிகரித்துக் காணப்பட்ட Abigali, தனது உடல் எடையைக் குறைத்திருந்தார். இது தான் Darren ஆச்சரியப்பட முக்கிய காரணமாகும்.

Man discovers wife is half woman she was after returning from abroad

அவர் இவ்வளவு ஆச்சரியப்படக் காரணம் இல்லாமல் இல்லை. ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் Abigali உடல் எடை அதிகரித்துக் காணப்பட்டார். இதனால் Darren தனது மனைவியின் உடல் நிலை குறித்து மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார். அதே நேரத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் Abigali, பணி காரணமாகத் தனது உடலைச் சரிவரக் கவனித்து கொள்ளாமல் இன்னும் அதிகமாக உடல் எடை போட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான் உடல் எடை காரணமாகத் தனது உடலில் நிகழும் மாற்றங்களை உணர்ந்த Abigali, உடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்டார். அதன்படி கடுமையான உடற்பயிற்சியினை மேற்கொண்ட அவர், அதற்கு ஏற்றாற்போல தனது உணவுப் பழக்கத்தையும் திட்டமிட்டுக் கொண்டார். ஆனால் அவை அனைத்தும் அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. Abigali ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் தலைவலியால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வந்துள்ளார்.

Man discovers wife is half woman she was after returning from abroad

அதோடு அதிகப்படியான உடல் எடை காரணமாக அவரது மூட்டுப் பகுதிகளில் அதிக வலியினை தினமும் சந்தித்து வந்துள்ளார். அப்போது தான் அதிகப்படியான உடல் எடை நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கானது என்பதை உணர்ந்த அவர், தனது கடுமையான முயற்சியின் காரணமாக ஊரடங்கு நேரத்தில் 40 கிலோ வரை தனது எடையினை குறைத்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் பலரும் மன அழுத்தத்தில் இருந்திருப்பார்கள். நானும் அப்படி சில நேரங்களில் இருந்தேன். ஆனால் அதை நல்ல விதத்தில் பயன்படுத்தி இன்று எனது உடல் எடையைக் குறைத்துள்ளேன்.

Man discovers wife is half woman she was after returning from abroad

பெண்கள் நிச்சயம் தங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். வயதாகி விட்டால் எதுவும் தேவையில்லை என நினைக்கக் கூடாது, பெண்களின் ஆரோக்கியம் நிச்சயம் மகிழ்ச்சியான குடும்பத்திற்கு ஆணி வேர் என'' பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை உதிர்க்கிறார் Abigali.

மற்ற செய்திகள்