‘ஒரு ஈ, காக்கா கூட இல்லாத எடத்துல டிராஃபிக்கா?’.. கூகுள் மேப்புக்கே விபூதி அடித்த வைரல் மனிதர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உண்மையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற வார்த்தைகளுக்கு பொருத்தமான ஒன்று இணையதளம் தான்.

‘ஒரு ஈ, காக்கா கூட இல்லாத எடத்துல டிராஃபிக்கா?’.. கூகுள் மேப்புக்கே விபூதி அடித்த வைரல் மனிதர்!

அதிலும் தேடுபொறி தளங்களில் முதன்மையான தளமான கூகுளில் எதை வேண்டுமானாலும் தேடி கண்டுபிடிக்க முடியும். அதேபோல் கூகுள் மேப் பயன்படுத்தி எந்த ஏரியாவையும் எந்த தெருவையும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்று ஆகிவிட்டது. ஆனால் பெர்லினை சேர்ந்த சைமன் விக்கெரிக் என்கிற கலைஞர் ஒருவர் நிறைய செல்போன்களை ஒரு தள்ளு வண்டியில் போட்டு தனது பகுதியில் தள்ளிக் கொண்டு சென்றுள்ளார்.  இதனிடையே அந்தப் பகுதியில் ட்ராபிக் இருக்கிறதா என்று கூகுள் மேப் வழியாக பரிசோதனை செய்த இணையவாசிகளுக்கு கூகுள் மேப் சிவப்பு நிற குறியீட்டினை காட்டியுள்ளது.

அதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் டிராபிக் இல்லை என்றால் கூகுள் மேப் பச்சை நிற குறியீட்டையும், டிராபிக் இருந்தால் சிவப்பு நிற குறியீட்டையும் காண்பிக்கும். ஆனால் சைமன் 99 செல்போன்களை ஒரு தள்ளு வண்டியில் போட்டு தள்ளிக்கொண்டே அந்த சாலையை கடந்தபோது அந்த சாலையில் ஒரிரு வாகனங்களே இருந்தன.  ஆனால் கூகுள் மேப்பில் பார்த்தவர்களுக்கு அங்கு டிராஃபிக் இருப்பதை குறிக்கும் வகையில் சிகப்பு நிறம்தான் காட்டப்பட்டது என்பதுதான் ஆச்சரியம். இந்த வகையில் கூகுளையே குழப்பியுள்ள சைமனின் செயல் வைரல் ஆகியுள்ளது.

SMARTPHONE, TRAFFIC, GOOGLEMAP