Vilangu Others

"கொரோனா வந்துடுமோ-னு பயம்.. அதுனால தான் அப்படி செஞ்சேன்".. நாடகமாடிய நபருக்கு 38 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்த கோர்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பெரும் தொற்று பல்வேறு வகைகளில் மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கிய இந்த வைரஸ் பரவல் பல்வேறு வேறியன்ட்களாக மாறி மனித குலத்தையே ஆபத்தில் தள்ளியிருக்கிறது. இருப்பினும், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி புழக்கத்திற்கு வந்த பிறகு கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதே சமயத்தில் கொரோனா குறித்த அச்சம் பலரையும் தவறான முடிவுகளை எடுக்க வைத்துவிடுகிறது. இதற்கான மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக தரப்படும் போதிலும் தேவையற்ற இதுபோன்ற அச்சம் மோசமான நிகழ்வுகளை உருவாகிவிடுகின்றன.

"கொரோனா வந்துடுமோ-னு பயம்.. அதுனால தான் அப்படி செஞ்சேன்".. நாடகமாடிய நபருக்கு 38 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்த கோர்ட்..!

இப்படி, அமெரிக்காவில் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது சடலத்துடன் ஒருவாரம் தங்கியிருந்த நபருக்கு 39 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவையே உலுக்கியுள்ளது.

அமெரிக்காவின் ஓக்லாந்து பகுதியை சேர்ந்தவர்கள் சார்ல்ஸ் ஷேர்வூட் (Jeff Sherwood) - சூசன் லூயிஸ் க்ளெப்ஸ் (Susan Louise Klepsch) தம்பதி.  கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி, ஓக்லாந்து நகர காவல்துறைக்கு புகார் ஒன்று வந்திருக்கிறது. ஒரு போன்கால். அதில், குறிப்பிட்ட தெருவில் வசிக்கும் தம்பதி ஒருவார காலமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனவும் உடனடியாக என்ன ஆயிற்று என்பதை விசாரிக்கும்படியும் அந்த போன் காலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Man Convicted Of Murdering Wife Sentenced to 39 years jail

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சார்லஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது துர்நாற்றம் வருவதை கண்டு போலீசார் அதிர்ச்சியாகி உள்ளனர். வீட்டிற்குள் சோதனையை ஆரம்பித்த நேரத்தில் படுக்கை அறைக்குள் யாரோ இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதிர்ச்சி

படுக்கை அறைக்குள் காவல்துறை அதிகாரிகள் நுழைந்த நேரத்தில் படுக்கையில் சற்றே சிதைந்திருந்த சடலத்துடன் சார்லஸ் அமைந்திருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் சார்லஸை கைது செய்தனர்.

கொரோனா பயம்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சார்லஸ் விசாரணையின் போது," கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் நானும் மனைவியும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டோம். முதலில் அவள் இறந்துவிட்டாள். ஆனால், எனக்கு தைரியம் வரவில்லை. அதனால் அவளுடைய உடம்புடன் வசிக்கத் துவங்கிவிட்டேன்" என்றார்.

Man Convicted Of Murdering Wife Sentenced to 39 years jail

ஆனால், காவல்துறை விசாரணையில் சார்லஸ் அவரது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரே கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தனது மனைவி சத்தம் போட்டதால் கோபத்தில் இவ்வாறு செய்துவிட்டதாக சார்லஸ் தெரிவித்திருக்கிறார்.

39 வருட தண்டனை

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 47 வயதான சார்லஸ்-க்கு 39 வருட தண்டனை அளிப்பதாக தீர்ப்பு அளித்துள்ளது. கொரோனா பயத்தால் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துவிட்டு அவரே தனது மனைவியை கொலை செய்திருப்பது அமெரிக்காவில்  அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

US, COVID, MURDER, கொரோனா, அமெரிக்கா, நீதிமன்றம்

மற்ற செய்திகள்