'விமான சக்கரத்தில் .. - 60 டிகிரி உறைநிலையில் தொங்கியபடி பயணம்!'.. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி, கோமாவில் இருந்தவருக்கு ‘பிரிட்டனில்’ நடந்த மகிழ்ச்சி செய்தி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சட்டவிரோதமாக தென்னாப்பிரிக்காவிலிருந்து விமான சக்கரத்தில் தொங்கியபடி லண்டன் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த நபர் தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்று வருகிறார்.

'விமான சக்கரத்தில் .. - 60 டிகிரி உறைநிலையில் தொங்கியபடி பயணம்!'.. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி, கோமாவில் இருந்தவருக்கு ‘பிரிட்டனில்’ நடந்த மகிழ்ச்சி செய்தி!

கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் 30 வயதான Themba Cabeka என்பவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி சட்டவிரோதமாக லண்டனின் Heathrow விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்திருந்தார். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

man clinging 5600 mile in flight wheel Survived at -60C

Themba Cabeka என்பவரும் அவருடைய நெருங்கிய நண்பரான Carlito என்பவரும் கடந்த ஜூன் மாதம் 2015-ல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றின் சக்கரத்தில் தொங்கியபடி திருட்டு பயணம் மேற்கொண்டனர். இருவரும் இதேபோல் விமான சக்கரத்தில் தொங்கியபடி - 60 டிகிரி செல்சியஸ் குளிரில் சுமார் பதினோரு மணி நேரம் சேர்ந்து பயணம் மேற்கொண்டனர். தென் ஆப்பிரிக்காவின் பட்டினிச் சாவிலிருந்து தப்பவே இரண்டு நண்பர்களும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என தெரிந்தும் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

man clinging 5600 mile in flight wheel Survived at -60C

இருவருக்கும் விமான பயணத்தில் கூட இதுதான் முதல் விமான பயணம்.  ஆனால் விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே இருவருக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை உண்டாக,  இருவரும் மயக்கம் அடைந்தனர் ஆனால் விமான சக்கரத்துடன் மின்சார கேபிள் மூலம் தங்களை இணைத்துக்கொண்டு இருவரும் தப்பியுள்ளனர். இதனிடையே லண்டன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக சுமார் 5000 அடி உயரத்திலிருந்து விழுந்து  Carlito மரணம் அடைந்தார்.

man clinging 5600 mile in flight wheel Survived at -60C

ALSO READ: 'ரூல்ஸ் ரூல்ஸ் தான்!'.. அது யாரா இருந்தாலும் சரி!.. ‘கொரோனா’ பாதுகாப்பு விதிமீறலால் ‘ஸ்காட்லாந்து’ பெண் எம்.பிக்கு நேர்ந்த கதி!

இந்த சம்பவம் 2015ல் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் ஆறு மாத காலமாக Themba Cabeka சிகிச்சையில் இருந்துள்ளார். பின்னர் அவர் கோமாவில் இருந்து கண்விழித்து எழுந்துள்ளார். விசாரணையில் அவருக்கு தற்போது தான் அவருடைய நண்பர் மரணமடைந்த செய்தி தெரியவந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் Themba Cabeka தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிட்டனில் குடியுரிமை பெற்று லிவர்பூல் பகுதியில் வசிக்கத்  தொடங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்