VIDEO: 'வானத்த தொடும் உயரத்தில பனை மரம்!.. அதோட உச்சிக்குப் போய்... உயிரை பணயம் வைத்து... இளைஞர் செய்த 'நடுங்க' வைக்கும் செயல்!
முகப்பு > செய்திகள் > உலகம்பனைமர ஓலைகளை வெட்ட நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று இயந்திரம் கொண்டு அதனை வெட்டும் செயல் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் படி அமைத்துள்ளது.
பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 எண்ணிக்கை வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில்.
தன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மரத்தில் ஏறிய நபர் ஓலைகளை வெட்டியதும் பனை மரம் வலது, இடது என அதன் உயரத்திற்கு ஏற்றவாறு சுற்றி நிற்கும் செயல் பார்ப்பவருக்கே தலை சுற்ற வைக்கின்றது.
Ever seen anyone cut a really tall palm tree?
Oh my god... pic.twitter.com/O0sde0ZCz0
— Rex Chapman🏇🏼 (@RexChapman) September 25, 2020
மற்ற செய்திகள்