என்னது 72 வருசமா எங்கயுமே மாட்டலையா..! செம ‘ஷாக்’ கொடுத்த தாத்தா.. மிரண்டு போன போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பல வருடங்களாக லைசென்ஸ் எடுக்காமல் கார் ஓட்டிய முதியவர் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாமில் உள்ள புல்வெல்லில் டெஸ்கோ எக்ஸ்ட்ரா என்ற பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, தான் 72 ஆண்டுகளாக லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் கார் ஓட்டி வருவதாக கூறி போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
1938-ம் ஆண்டு பிறந்த அவர், தனது 12 வயதில் இருந்து லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் கார் உள்பட பல்வேறு வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த 70 ஆண்டுகளில் தான் ஒருமுறை கூட போக்குவரத்து போலீசாரால் நிறுத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதை கேட்ட போலீசார் வியப்படைந்துள்ளனர்.
இதுகுறித்த செய்தியை தங்களது பேஸ்புக் பக்கத்தில் புல்வெல் போலீசார் பகிர்ந்துள்ளனர். அந்த முதியவர் ஒட்டிய காரின் போட்டோவை பதிவிட்டு, ‘1938-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 12 வயது முதல் லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்துள்ளார். எப்படியோ அவர் எந்த போலீசாராலும் நிறுத்தப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த நபர் இதுவரை எந்த விபத்தையும் சந்திக்கவில்லை, யாரையும் காயப்படுத்தவில்லை. அதேபோல் இதுவரை யார் மீதும் மோதி அவர்களுக்கு பண இழப்பு எதையும் செய்யவில்லை’ என குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்