VIDEO: ஆத்தீ எவ்ளோ பெருசு..! படமெடுத்து கொத்த பாய்ந்த ராஜ நாகம்.. ‘ஜஸ்ட் மிஸ்’.. அல்லு விட வைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்மிகப்பெரிய ராஜ நாகத்தை ஒருவர் வெறும் கையால் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிராபியில் மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று பனை தோட்டத்தில் உள்ள கழிவு நீர் சேகரிக்கும் தொட்டிக்குள் மறைந்து இருந்துள்ளது. இதைப் பார்த்த மக்கள் உடனே பாம்பு பிடிக்கும் தன்னார்வலரான சுதீ நவ்ஹாத் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சுதீ நவ்ஹாத், கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் போராடி பாம்பை பிடித்தார். முதலில் பாம்புக்கு போக்கு காட்டி சாலைக்கு கொண்டு வந்தார். பின்னர் அதை பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். சுதீ நவ்ஹாத் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் பாம்பு சாமார்த்தியமாக தடுத்து போக்குக் காட்டியுள்ளது.
ஒரு கட்டத்தில் அவரை கடிக்க பாம்பு முற்படுகிறது. ஆனால், சாதுர்யமாக செயல்பட்ட அவர், பாம்பை லாவகமாக பிடித்துவிட்டார். இதனை அடுத்து அந்த பாம்பை பத்திரமாக வனப்பகுதிக்குள் சென்று விட்டுவிட்டார். இதுகுறித்து பேசிய சுதீ நவ்ஹாத், ‘ராஜ நாகம் பிடிபட்ட பிறகு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. சமீபத்தில் மற்றொரு நாகப்பாம்பு உள்ளூர் மக்களால் கொல்லப்பட்டதால், பாம்பு தன் துணையை தேடி இங்கு வந்திருக்கலாம் என நினைக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் ராஜ நாகத்தை பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்