மனைவியை உயிருடன் புதைத்த நபர்.. ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்து வந்த அவசர அழைப்பு.. அடுத்தடுத்து பரபரப்பு!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெண் ஒருவரை அவரது கணவர் உயிருடன் புதைத்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியை உயிருடன் புதைத்த நபர்.. ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்து வந்த அவசர அழைப்பு.. அடுத்தடுத்து பரபரப்பு!!

Also Read | பிரிட்டனை ஆளப் போகும் இந்திய வம்சாவளி.. உலகமே உற்று நோக்கும் யார் இந்த ரிஷி சுனக்??..

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர் Young Sook An (வயது 42). இவரது கணவர் Chae Kyong (வயது 52). கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், அடிக்கடி அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, சமீபத்தில் அவர்கள் விவாகரத்தும் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தாலும் அடிக்கடி மனைவி யங் வீட்டிற்கு செல்வதை சே க்யாங் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் கணவன் மனைவி இடையே பணம் தொடர்பாக வாக்குவாதம் உருவானதாக தகவல்கள் கூறுகின்றது. இந்த  வாக்குவாதம் அடிதடியாகவும் மாறியுள்ள நிலையில், உன்னை கொன்று விடுவேன் என்றும் தனது மனைவியை பார்த்து சே கியாங் ஆவேசமாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர், மனைவி யங்கை சே தாக்க அவர் மயக்கமடைந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, கத்தியால் மனைவியை குத்திய க்யாங், அவரது கை மற்றும் வாயை டேப்பால் ஒட்டி காரில் சியாட்டில் புறநகர் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். இதன் பின்னர், அங்கே குழி ஒன்றை தோண்டி தனது மனைவியை உயிருடன் க்யாங் புதைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, யங் சூக் தனது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் மூலம் அவசர எண்ணுக்கு அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

man buried his wife alive survived by the help of smart watch

மேலும், அவரது மகளுக்கும் எமெர்ஜன்சி நோட்டிபிக்கேஷன் ஸ்மார்ட் வாட்சில் இருந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அவரது ஸ்மார்ட் வாட்ச்சையும் கோபத்தில் உடைத்த சே க்யாங், மண்ணில் குழி தோண்டி மனைவியை புதைத்துள்ளார். அப்போது மயக்கம் தெளிந்த யங், தன் கை மற்றும் வாய்ப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை அகற்றி, மண்ணையும் மெல்ல மெல்ல அகற்றி பின்னர் வெளியே வந்து விட்டதாக தெரிகிறது.

இதன் பின்னர், அருகே பதுங்கி இருந்த யங்கை தேடி அவரின் ஸ்மார்ட் வாட்சில் இருந்து சென்ற அவசர அழைப்பின் பெயரில் போலீசாரும் அங்கே வந்தனர். பின்னர் யங் சூக்கை மீட்டு, அவர் அளித்த புகாரின் பெயரில் அவரது கணவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read | 32 வருசம் கழிச்சு ஆசிரியையை பார்த்த விமான பணிப்பெண்.. அடுத்த நிமிஷமே நடந்த மனம் உருகும் சம்பவம்!!.. எமோஷனல் வீடியோ!!

MAN, WIFE, ALIVE, HELP, SMART WATCH

மற்ற செய்திகள்