'என்ன கொடுமை சார் இது..?'- இந்த அமெரிக்ககாரருக்கு அவர் உடம்பே பீர் தயாரிக்குதா?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த அமெரிக்காரருக்கு அவரது வயிறே சொந்தமாக பீர் தயாரிக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாங்க. இவரது வயிறே ஒரு வித நோய் பாதிப்பினால் பீர் தயாரிக்கிறது.
40 வயதான ஆடம் ஸ்டம்ப் என்ற ஒரு அமெரிக்கருக்கு தனியாக மது அருந்தி போதை ஏற்றத் தேவையில்லை. அவரது வயிறே அவருக்குத் தேவையான பீரை உற்பத்தி செய்து அவரை 24 மணி நேரமும் போதையிலேயே வைத்திருக்கிறது. அவரது வயிறு ஒவ்வொரு முறை அவர் உணவு சாப்பிட்டதும் அதில் உள்ள கார்போஹைட்ரேட் கொண்டு பீர் உற்பத்தியைத் தொடங்கிவிடுகிறது.
Auto-brewery syndrome (ABS) என்னும் நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார் ஆடம். ஆனால், அவருக்கு அந்தப் பிரச்னை குறித்து எதுவும் தெரிந்து இருக்கவில்லை. கார்ப்ஸ் நிறைந்த உணவுகளை எப்போது சாப்பிட்டாலும் மது அருந்தினால் ஏற்படும் அத்தனை விளைவுகளும் அவருக்கும் ஏற்பட்டு இருக்கிறது.
மது அருந்தாமலேயே அதிகப்படியான போதை, வாய் குளறுதல், மயக்கம் ஆகியன ஏற்பட்டுக் கொண்டே இருந்துள்ளன. நீண்ட காலம் அவதிப்பட்டு வந்தவருக்கு திருமணம் ஆகியுள்ளது. அப்போது ஒரு நாள் ஆடம் உடன் வசித்த அவரது மனைவி அவர் பெரிய குடிகாரர் என நினைத்துள்ளார். அடுத்த நாள் தான் அவர் குடிக்கவில்லை ஆனால் அதன் விளைவுகளை சுமந்து கொண்டிருப்பதை அறிந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் தான் ஆடம் என்ன பிரச்னையில் சிக்கித் தவித்து வருகிறார் என அவருக்கும் அவரது மனைவிக்கும் புரிந்துள்ளது. தற்போது ஆடம் சிகிச்சையில் இருக்கிறார். சுத்தமாக அவரால் கார்ப்ஸ் எதையுமே சாப்பிட முடியாது. எப்போதும் போதையிலேயே தள்ளாடிக் கொண்டிருந்தவருக்கு இப்போதுதான் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே தெரிந்து கொள்ள முடிகிறதாம்.
மற்ற செய்திகள்