Veetla Vishesham Mob Others Page USA

ஒத்த விரல் தான்.. சும்மா 8 விநாடிக்கு.. 129.5 கிலோவ தூக்கிப் பிடிச்ச மனுஷன்.. யாருய்யா இவரு.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனை சேர்ந்த 48 வயதானவர் Steve Keeler. இவர் தம்முடைய நடுவிரலை மட்டுமே பயன்படுத்தி 129.50 கிலோ (285.49 எல்பி) எடையை 8 வினாடிகளுக்கு தூக்கியிருக்கிறார்.

ஒத்த விரல் தான்.. சும்மா 8 விநாடிக்கு.. 129.5 கிலோவ தூக்கிப் பிடிச்ச மனுஷன்.. யாருய்யா இவரு.?

Also Read | 40 வருஷமா செப்டிங் டேங்கில் மனைவியின் உடலை வைத்த 89 வயது கணவர்..? பரபரப்பு சம்பவம்.!

இதன் காரணமாக இவர், உலக சாதனையாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் முதன்மையான புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அது எப்படி ஒரே ஒரு விரலால் இவ்வளவு எடையை சுமார் 8 விநாடிகளுக்கு தூக்கிப் பிடிக்க முடியும் என்பது பலருக்கு நம்பமுடியாத ஆச்சரியமாகவும் சாதனையாக இருந்தது.

இதனை அடுத்து இது குறித்து அவரே மனம் திறந்திருக்கிறார். அவரும் இதே தான் சொல்லியிருக்கிறார், ஆம்... இது நம்ப முடியாத அளவுக்கு தனக்கு இருந்ததாகவும், அதே சமயத்தில் இப்படி செய்யும்போது மிகவும் கஷ்டமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே மற்றவர்கள் இதை முயற்சிப்பதற்கு பயிற்சி வேண்டும், இல்லையேல் முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் அன்போடு கூறியுள்ளார்.

குறிப்பாக விரல்கள் வலுவாக இருப்பதாகவும், தான் இவ்வாறு இவ்வளவு பெரிய எடையை லிப்ட் பண்ணியதற்காக பெருமைப்படுவதாகவும் கூறியதுடன் தன்னுடைய சாதனையைப் பற்றியும் கூறுகிறார். தற்காப்பு கலைஞரான Steve Keeler, 2022 பிப்ரவரி மாதம் முதல் இதை முயற்சித்து வந்திருக்கிறார்.

Man breaks world record by lifting 129.5 kg with one finger

கிட்டத்தட்ட 10 க்கும் அதிகமான எடையைத் தூக்கி, ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட ஒரு சாதனையை முன்பாக முறியடித்தார். இப்படி 10 கிலோ, 20 கிலோ,  26 கிலோ என ஒரே நேரத்தில் படிப்படியாக செய்து, இப்போது இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். இந்த சாதனையை அவர் படைப்பதற்கு அவருக்கு நான்கு வருடங்கள் எடுத்திருக்கின்றன. தம்முடைய பதினெட்டு வயதில் இருந்தே கராத்தே பயிற்சி செய்து வரும் இவர் தம்முடைய கையும், எலும்பும் வலுவாக இருப்பதை அறிந்து இதை செய்யத் தொடங்கினார்.

Also Read | நைட்டு 10.30 மணி... கண்ணு முழிச்சு பார்த்தா ஜன்னல் வழியா கண்ட காட்சி.. பதைபதைத்து போன பெண்.!

MAN LIFTS 129.5 KG WITH ONE FINGER, WORLD RECORD

மற்ற செய்திகள்