'பி.எம்.டபுள்யூ வெச்சிருந்தா போதுமா? அதுக்கு ஃபியூவல் போட வேணாமா?'.. வைரல் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீன விவசாயி ஒருவர் தான் வைத்திருக்கும் பி.எம்.டபுள்யூ காருக்கு எரிபொருள் போடுவதற்காக கோழி மற்றும் வாத்து உள்ளிட்ட வளர்ப்புப் பறவைகளைத் திருடி வந்துள்ள காரியம் தெரிய வந்துள்ளது.

'பி.எம்.டபுள்யூ வெச்சிருந்தா போதுமா? அதுக்கு ஃபியூவல் போட வேணாமா?'.. வைரல் சம்பவம்!

பி.எம்.டபுள்யூ கார் வைத்திருப்பவர்கள் மீதான மதிப்புக்கு காரணம், பணம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்பதுதான். ஆனால் சீனாவில் 50 வயதான விவசாயி செய்த இந்த காரியம் பி.எம்.டபுள்யூ காரை வைத்துக்கொண்டு இந்த மனுஷன் செய்யும் காரியமா இது என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லின்ஷி மாவட்டத்துக்குட்பட்ட கிராமத்தில் அண்மைக்காலமாகவே வளர்ப்புக் கோழிகளும் வாத்துக்களும் காணாமல் போனதாக புகார்கள் எழுந்துவந்தன. இந்தப் புகார்களின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் 50 வயதான இந்த விவசாயியை பிடித்துள்ளனர்.

விசாரணையில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ காரை சொந்தமாக வாங்கியுள்ள இந்த முதியவர், ஆனால் அந்த காருக்கு எரிபொருள் போட முடியாததால், அந்த கிராமத்தின் வளர்ப்புக் கோழிகள் மற்றும் வாத்துக்களைத் திருடிச் சென்று, விற்றுள்ளார். அப்படி அவர் திருடும்போதுதான் சிசிடிவி கேமரா மூலம் போலீஸார் பொறி வைத்து பிடித்துவிட்டனர். ஆனாலும் தப்பியோடியவரை, அவரது வீட்டிற்குச் சென்று போலீஸார் கைது செய்தனர்.

CHINA, BMW, FUEL