'சந்தேகம் வராமல் பக்கா ஸ்கெட்ச்'...'சார், வாங்க ஒரு சின்ன ஸ்கேன் பண்ணும்'... ரிப்போர்ட்டை பார்த்து ஆடிப்போன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பயணி ஒருவரைச் சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

'சந்தேகம் வராமல் பக்கா ஸ்கெட்ச்'...'சார், வாங்க ஒரு சின்ன ஸ்கேன் பண்ணும்'... ரிப்போர்ட்டை பார்த்து ஆடிப்போன அதிகாரிகள்!

ஜெனீவா விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே பயணி ஒருவர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுவதாக ரகசியத் தகவல் வந்ததையடுத்து அதிகாரிகள் பயணிகளைத் தீவிரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பயணியைத் தனியாக அழைத்து சென்ற அதிகாரிகள் அவரிடம் சோதனை மேற்கொண்டார்கள். அப்போது அந்த பயணியின் வயிற்றுக்குள் 100 சிறு சிறு பாக்கெட்களில் கொக்கைன் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

Man arrested at Geneva airport for carrying 100 cocaine pellets

Madridலிருந்து  ஜெனீவா வந்த அந்த நபர், தன்னிடம் ஒருவர் அந்த போதைப்பொருள் பாக்கெட்களைக் கொடுத்ததாகவும், ஜெனீவாவிலுள்ள ஒருவரிடம் அதை ஒப்படைக்குமாறு தனக்குக் கூறப்பட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்காக 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் கூறினார். 42 வயதான அந்த நபரைக் கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்