"மரணத்தோட விளிம்பு வர போய்ட்டு வந்தேன், அந்த 20 நிமிஷம்".. அமானுஷ்ய அனுபவம் பகிர்ந்த முதியவர்.. "கேக்கவே பயங்கரமா இருக்கே"
முகப்பு > செய்திகள் > உலகம்மனிதர் ஒருவர் இறப்பு வரை சென்று திரும்பிய நிலையில், அப்போதிருந்த அனுபவம் தொடர்பாக அவர் கூறியுள்ள விஷயம், பலரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
US பகுதியை சேர்ந்த Scott Drummond என்ற நபர் ஒருவருக்கு சமீபத்தில் பனிச்சறுக்கின் போது விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் அவரது கட்டை விரல் சிதைந்து போயுள்ளது.
இதனிடையே, ஸ்காட்டிற்கு பரிசோதனை மேற்கொண்ட செவிலியர் ஒருவர், தவறுதலாக மருந்தினை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஸ்காட் உடல்நிலை திடீரென மோசமாகி, அவர் உயிர் பிழைக்கும் விஷயமும் கடினமாகி கொண்டே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் தனக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி தற்போது விளக்கம் அளித்துள்ளார் ஸ்காட். இதன் காரணமாக, சுமார் 20 நிமிடங்கள் வரை தனது உடலில் இருந்து பிரிந்து இருந்ததாகவும், அது ஒரு அமானுஷ்ய அனுபவம் என்றும் ஸ்காட் குறிப்பிடுகிறார்.
ஆன்மாவாக தான் பிரிந்து சென்றதாக ஸ்காட் குறிப்பிடும் நிலையில், தனது அருகே யாரோ ஒருவர் அந்த உலகத்தில் இருந்ததாகவும் கூறி உள்ளார். மேலும், தனது கையில் போடப்படும் தையலையும் மேலே இருந்து ஸ்காட் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும், வழிகாட்டி ஒருவர் மூலம், அழகிய புல் நிறைந்த வயல்வெளி ஒன்றிற்கு தான் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஸ்காட் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
அதே போல, தான் சென்ற இடம் முழுவதும், முன் பின் பார்த்திடாத பெரிய மரங்கள் மற்றும் இலைகள் இருந்தததாக ஸ்காட் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வாழ்க்கை முழுவதுமுள்ள ஏராளமான விஷயங்களையும் ஒரு படம் போல ஓடியது என்றும் அவர் கூறி உள்ளார். சுமார் 20 நிமிடங்கள் தான் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், மீண்டும் தனது உடலில் புகுந்து கண் விழித்துக் கொண்டதாகவும் ஸ்காட் கூறி உள்ளார்.
அதே போல, தன்னுடைய நிஜ வாழ்க்கையை விட இறந்ததாக கருதப்பட்ட சமயத்தில் தான் கண்ட இடம், சிறந்ததாகக் தோன்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இறப்பு அருகே வரை அவர் சென்று விட்டு திரும்பியதால், தனது வாழ்க்கை முறையே மாற்றி அவர் வாழ்ந்து வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இறப்பு அருகே வரை சென்று திரும்பிய முதியவரின் அமானுஷ்ய அனுபவம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. ஒரு சிலர் இதனை நிஜம் என கருதினாலும், மறுபக்கம் பலரும் இது அவரது கற்பனையாக இருக்கும் என்றும், அதீத மயக்கத்தில் இருந்ததால் அப்படி தோன்றி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்