'கொரோனாவால் வேலை போச்சு!'.. சற்றும் மனம் தளராத விமானி எடுத்த, ‘புதிய’ அவதாரம்! இணையத்தில் குவியும் வாழ்த்துகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மலேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலை இழந்த விமானி ஒருவர் நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கி பிரபலம் அடைந்திருக்கிறார்.

'கொரோனாவால் வேலை போச்சு!'.. சற்றும் மனம் தளராத விமானி எடுத்த, ‘புதிய’ அவதாரம்! இணையத்தில் குவியும் வாழ்த்துகள்!

உலகம் முழுவதும் கொரோனாவால் உண்டான, கட்டுப்பாடுகளால் மலேசியாவின் மலிந்தோ ஏர் விமான நிறுவனம் தமது 2 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. இதில் நான்கு குழந்தைகளுக்கு தந்தையான விமானி Azrin Mohamad Zawawi என்பவரும் வேலை இழந்தார்.

Malaysian Pilot started to do this after losing job Amid COVID-19

ஆனாலும் சற்றும் மனம் தளராமல் தலைநகர் கோலாலம்பூரில் சிறிய நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கியுள்ளார் Azrin Mohamad Zawawi. விமானி சீருடையுடன் பணிக்கு வரும் இவர் இணையத்தில் வைரலான நிலையில் இவரின் நூடுல்ஸ் கடை சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்