"இப்டி கூடவா நடக்கும்.." நடுரோட்டில் நடந்த எதிர்பாராத சம்பவம்.. "பின்னாடி வந்தவங்க எல்லாம் பயந்தே போய் இருப்பாங்க.."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பைக்கில் இருவர் சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையில் வைத்து நடந்த எதிர்பாராத சம்பவம் ஒன்று, பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

"இப்டி கூடவா நடக்கும்.." நடுரோட்டில் நடந்த எதிர்பாராத சம்பவம்.. "பின்னாடி வந்தவங்க எல்லாம் பயந்தே போய் இருப்பாங்க.."

மலேசியாவின் ஹைவேயில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோவின் ஆரம்பத்தில் இரண்டு பேர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சாலை அருகே நின்று கொண்டிருந்த தென்னை மரத்தில் இருந்து, ஒரு தேங்காய் அந்த பைக்கில் பின் சீட்டில் இருந்த பெண் மீது விழுந்துள்ளது.

எதிர்பாராமல் நடந்த விபத்து

இதன் காரணமாக, வேகமாக சென்று கொண்டிருந்த பைக்கில் இருந்து நிலை தடுமாறி சாலையின் நடுவே அந்த பெண் விழவும் செய்கிறார். உடனடியாக, அந்த பைக்கை ஓட்டி வந்தவரும் அங்கே பைக்கினை நிறுத்தி, பெண் விழுந்த இடம் நோக்கி ஓடி வருகிறார். அது மட்டுமில்லாமல், பின்னால் வந்த வாகன ஓட்டிகளும், பதறிப் போய் மற்ற வண்டிகளை நிறுத்த, விபத்து நடந்ததால் அங்கே நின்று கொண்டிருந்தவர்களும், மற்ற வாகனங்கள் முன்னேறி செல்ல விடாமல், தடுத்து நிறுத்துகின்றனர்.

தேங்காய் விழுந்து விபத்தில் சிக்கிய பெண் ஹெல்மெட் அணிந்திருந்ததால், உயிர் தப்பியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், மலேசிய அமைச்சர் ஒருவரும், இது போன்ற விபத்துகளை தவிர்க்க, சாலை ஓரம் நிற்கும் தென்னை மரங்களை சரிவர பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை..

தொடர்ந்து, பைக்கில் இருந்து விழுந்த பெண்ணின் மகளும், தாயின் உடல்நிலை குறித்து, ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர் வெளியிட்ட பதிவின் படி, விபத்தில் சிக்கியது தனது தாய் தான் என்றும், வண்டியை ஓட்டி வந்தது என்னுடைய இளைய சகோதரி என்றும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், தனது தாயார் கண் திறந்து விட்டாலும், உடல் நிலை சற்று மோசமாக இருப்பதால் தொடர்ந்து மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது தங்கை சிறிய அதிர்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், வாழ்க்கையில் எந்த நொடி என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த விபத்து இருப்பதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

ROAD, ACCIDENT, MALAYSIA, COCONUT

மற்ற செய்திகள்