VIDEO : நைட் தொலைஞ்ச ஃபோன் 'காலை'ல கெடச்சுது,,.. 'திருட்டு' போன மொபைல 'செக்' பண்ண 'இளைஞருக்கு',,.. காத்திருந்த 'அதிர்ச்சி' கலந்த 'ஆச்சரியம்'!!! - வைரலாகும் 'வீடியோ'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மலேஷியாவின் பத்து பகாட் (Batu Pahat) என்னும் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் சாக்ரிட்ஸ் ரோட்சி (Zackrydz Rodzi). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூங்க சென்ற போது தனது மொபைல் போனை கட்டிலுக்கு அருகே வைத்து விட்டுத் தூங்கப் சென்றுள்ளார்.

VIDEO : நைட் தொலைஞ்ச ஃபோன் 'காலை'ல கெடச்சுது,,.. 'திருட்டு' போன மொபைல 'செக்' பண்ண 'இளைஞருக்கு',,.. காத்திருந்த 'அதிர்ச்சி' கலந்த 'ஆச்சரியம்'!!! - வைரலாகும் 'வீடியோ'

இந்நிலையில், மறுநாள் காலை எழுந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது மொபைல் போன் இருந்த இடத்தில் அதைக் காணவில்லை. தனது வீட்டில் கொள்ளை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், வீடு முழுவதும் இளைஞர் சோதனை செய்தார். ஆனால், தனது மொபைல் போனைத் தவிர வேறு எதுவும் கொள்ளை போகவில்லை.

இதனைத் தொடர்ந்து, தனது தந்தையின் போனில் இருந்து, தனது போனிற்கு அழைப்பு விடுத்து தேடத் தொடங்கியுள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் இளைஞரின் மொபைல் போன் கிடைத்துள்ளது. உடனடியாக, அவரது போனை சோதித்து பார்த்த போது, கேலரிக்குள் (gallery) அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் காத்திருந்தது.

அதில், குரங்கு ஒன்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது. இதனை தனது குடும்பத்தினர் அனைவரிடமும் காண்பித்து இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார். அதில் இருந்த செல்ஃபி வீடியோ ஒன்றில், குரங்கின் முகம் தெரிந்த நிலையில், அதனை கடித்துத் தின்னவும் குரங்கு முயற்சி செய்தது. முன்னதாக, ஜன்னல் வழியே வீட்டிற்குள் நுழைந்த குரங்கு, போனை திருடிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்