'முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த வைரஸ்'... 'தற்போதைய தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம்... 'சிவகங்கை நபரால் போராடும் நாடு!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸை விட 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த வைரஸ்'... 'தற்போதைய தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம்... 'சிவகங்கை நபரால் போராடும் நாடு!'...

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதல்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் மாதக்கணக்கில் போராடியும், ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டும் இன்னும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் உள்ளது.

இந்நிலையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸை விட 10 மடங்கு அதிக சக்தி கொண்ட புதிய கொரோனா வைரஸை மலேசியா கண்டுபிடித்துள்ளது. 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் மாற்ற டி614ஜி என அழைக்கப்படுகிறது. இதுவரை அங்கு 45 நோயாளிகளிடம் இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து மலேசியா சென்ற சிவகங்கையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரால்தான் இந்த புதிய வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டும், அதை மீறியதால்  அவருக்கு 5 மாதம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிலிப்பைன்ஸில் இருந்து வந்தவர்களிடமும் இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்பைவிட வேகமாக பரவும் இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு  ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவரும் தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம் எனக் கூறப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்