Viruman Mobiile Logo top

புகார் கொடுக்க கிளம்பிய முதியவர்.. "நீங்க தான் ஏற்கனவே இறந்துட்டீங்களே.." போலீஸ் பதிலை கேட்டு ஆடி போன மனுஷன்.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எழுபதுக்கு மேல் வயது முதியவர் ஒருவர், போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுக்க சென்றிருந்த நிலையில், போலீசார் அவரிடம் தெரிவித்த கருத்து, ஒரு நிமிடம் அவரை ஆடி போக வைத்துள்ளது.

புகார் கொடுக்க கிளம்பிய முதியவர்.. "நீங்க தான் ஏற்கனவே இறந்துட்டீங்களே.." போலீஸ் பதிலை கேட்டு ஆடி போன மனுஷன்.. பின்னணி என்ன??

மலேசியாவைச் சேர்ந்தவர் Low Choo Choon. இவர் இறுதி ஊர்வல வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு, சிறிது நிலத்தையும் Low choo வாங்கி உள்ளார்.

வருங்காலத்தில், தானும், தன்னுடைய மனைவியும் உயிரிழந்த பின்னர், அடக்கம் செய்வதற்காக இந்த நிலத்தை அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நிதி நெருக்கடி காரணமாக அந்த நிலத்தையும் தனது உறவினர் ஒருவருக்கு விற்க Low Choo முடிவு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதற்காக தங்களின் நில பத்திரத்தினை தேடிய போது தான், கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்தது. நிலப் பத்திரம் காணாமல் போனதால், போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்க Low Choo முன் வந்துள்ளார். அதன் படி, தனது நிலத்தின் பத்திரத்தை காணவில்லை என்ற போலீசாரிடம் புகாரளிக்க சென்ற போது, அவர்களின் பதிலைக் கேட்டு உறைந்து போயுள்ளார் Low Choo Choon.

malayasia man went to lodge complaint police answer confused him

அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிருடன் இருக்கும் தான், எப்படி ஏற்கனவே இறந்து போனதாக போலீசார் கூறுகிறார்கள் என்பதை கேட்டு, Low choo ஒரு நிமிடம் குழம்பி போயுள்ளார். தொடர்ந்து, இது தொடர்பாக தேசிய பதிவு துறையில் புகார் ஒன்றை அளிக்கவும் போலீசார் ஆலோசனை அளித்துள்ளனர். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, Low Choo புகார் கொடுத்தாலும் இதுவரை அவர் உயிருடன் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு ஆவணங்கள் எதுவும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

"நான் பல ஆண்டுகளாக இறுதி சடங்கு செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். ஆனால், நானே இறந்தவர்கள் பட்டியலில் இருப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை" என Low Choo கூறி உள்ளார். சட்ட பூர்வமாக அவர் இறந்து 8 மாதங்கள் ஆன நிலையில், ஓட்டுநராக இருக்கும் Low Choo, சாலை வரி சான்றிதழை புதுப்பிக்க முடியாமலும் சிரமப்பட்டுள்ளார். இறுதியில், எப்படியோ போக்குவரத்து துறையில் உள்ள அதிகாரிகளிடம் உண்மையை உணர்த்தி, 18 மாதங்களுக்கு அதனை நீட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல, இறந்ததாகவே இருக்கும் நிலை தொடர்ந்தால், Low Choo-வின் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை முடங்கக் கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உயிருடன் இருந்தும், அவர் இறந்ததாக ஆவணத்தில் உள்ளதால், முதியவர் சந்தித்து வரும் பிரச்சனைகள் கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

MALAYSIA, POLICE

மற்ற செய்திகள்