'மச்சான், அங்க பாருடா'... 'கண்ணிமைக்கும் நேரத்தில் டவலை எடுத்து கொண்டு ஓடிய இளைஞர்கள்'... ஒரே ஒரு பூனையால் அடித்த ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் உட்பட 4 பேரைத் துபாய் நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அழைத்துப் பாராட்டினார்.

'மச்சான், அங்க பாருடா'... 'கண்ணிமைக்கும் நேரத்தில் டவலை எடுத்து கொண்டு ஓடிய இளைஞர்கள்'... ஒரே ஒரு பூனையால் அடித்த ஜாக்பாட்!

துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த பலர் வசித்து வரும் நிலையில் இவர்களில் சிலர் வீட்டில் பூனை வளர்க்கிறார்கள். இந்த பூனைகள் வீட்டிலிருந்து அவ்வப்போது வெளியேறி, வீட்டின் சுவர்களில் ஏறி அங்குமிங்கும் நடைபோடுவது வழக்கம்.

Malayalis receive Rs 10 lakh gift from Ruler of Dubai for rescuing cat

சம்பவத்தன்று குடியிருப்பின் 3-வது மாடியின் பால்கனி பகுதியில் ஒரு பூனை அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தது. சுவரின் மீது ஏறி நடை போட்ட அந்த பூனை திடீரென 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்தது. இதைப் பார்த்த கேரளாவைச் சேர்ந்த நசீர் முகமது என்பவர் பார்த்து விட்டார்.

Malayalis receive Rs 10 lakh gift from Ruler of Dubai for rescuing cat

அவர் உடனே அங்குக் குடியிருந்த கோழிக்கோடு  பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசீத் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மேலும் இருவரை தன்னுடன் அழைத்து அந்த பூனையை மீட்க முயற்சி மேற்கொண்டார். இதற்காக தன்னிடம் இருந்த டவலை பூனை விழும் பகுதியில் வலை போல் விரித்துப் பிடித்துக் கொண்டார்.

Malayalis receive Rs 10 lakh gift from Ruler of Dubai for rescuing cat

மாடியிலிருந்து விழுந்த பூனை அதிர்ஷ்டவசமாக இவர்கள் விரித்த துணியில் விழுந்தது. இதனால் அந்த பூனை காயம் ஏதுவுமின்றி  தப்பியது. இந்த காட்சிகளைக் குடியிருப்பில் வசித்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது துபாய் முழுவதும் வைரலாக பரவியது.

இந்த வீடியோ துபாய் நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் கவனத்திற்கும் சென்றது. அவரும் பூனையை மீட்ட 2 மலையாளிகள் மற்றும் பாகிஸ்தானியர்களைப் பாராட்டினார். மேலும்  தனது உதவியாளர் மூலம் பூனையை மீட்ட 4 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் பரிசும் வழங்கினார்.

மற்ற செய்திகள்