ப்ளீஸ், 'அவங்கள' தடுக்காதீங்க...! 'அப்படி' பண்ணக் கூடாதுன்னு 'எங்கையுமே' சொல்லல...! - தாலிபான்களிடம் 'வேண்டுகோள்' விடுத்த மலாலா...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிதானில் போடப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக மலாலா குரல் எழுப்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி தொடங்கப்பட்டது முதல் அங்கிருக்கும் பெண்களின் நிலையும், உரிமையும் மீண்டும் கேள்விக்குறியாகி வருகிறது. தாலிபான் ஆப்கானை கைப்பற்றுவதற்கு முன் நாங்கள் திருந்தி விட்டோம், பெண்களை மதிப்போம் என்று சொன்ன உறுதிமொழியெல்லாம் இப்போது காற்றில் கரையும் கதை போல மாறியுள்ளது.
அதோடு, ஆப்கானிதானில் தாலிபான் ஆட்சி அமைத்து ஒன்றரை மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் அங்கு பெண் குழந்தைகளுக்குக் கல்வி உட்படப் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது என்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு,பல நாட்டு தலைவர்கள் தாலிபான்களுக்குத் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில், அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மலாலா ஆப்கன் பெண்களின் கல்வியை தடை செய்ய கூடாது என தொடர் கோரிக்கைகளை வைத்து வருகிறார்.
அதுதொடர்பாக மலாலா வெளியிட்ட அறிக்கையில், 'எந்த மதமும் பெண்களின் கல்வி மறுக்கப்படுவதை அனுமதிக்காது. ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தாலிபான்கள் அனுமதித்து தடையைத் திரும்பப் பெற வேண்டும்' தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்