ஜெயிலில் இருந்து தப்பித்த மாஃபியா தலைவன்.. பெட்ஷீட்டை வச்சு போட்ட பலே ப்ளான்.. .. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலி நாட்டை சேர்ந்த மாஃபியா தலைவன் சிறையிலிருந்து தப்பிக்கும் வீடியோ தான் தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி.. வானத்தில் பறக்கும் வீரர்கள்.. சல்யூட் அடிக்க வைக்கும் வீடியோ..!
மத்திய தரைக்கடலில் உள்ள தீவு பிரதேசம் சார்டீனியா. பிரெஞ்சு ஆளுமைக்கு உட்பட்ட இந்த பகுதியில் Badu’e Carros எனும் இடத்தில் ஒரு சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கே 40 வயதான மாஃபியா தலைவனான மார்கோ ராடுவானோ அடைக்கப்பட்டிருந்தார். ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட்டிருந்த மார்கோ ராடுவானோவிற்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் பத்திரிகையான இல் மெசாகெரோ, கடந்த சனிக்கிழமை மார்கோ ராடுவானோ சிறையில் இருந்து தப்பித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், சிறைச்சாலையில் தனக்கு வழங்கப்பட்ட பெட்ஷீட்டை கயறு போல திரித்து அதை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பித்திருக்கிறார் மார்கோ ராடுவானோ. இந்த திட்டத்தை வெகுநாட்களாகவே அவர் செயல்படுத்துவது பற்றி யோசித்து வந்திருக்கலாம் எனவும், சிறையில் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையின் கோட்டை சுவரில் இருந்து, பெட்ஷீட்டால் உருவாக்கப்பட்ட கயறு மூலமாக கீழிறங்கும் மார்கோ ராடுவானோ, பின்னர் அங்கிருந்து தப்பியோடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது அங்குள்ள சிசிடிவி கேமராவால் எடுக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் அந்த நகரத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களையும் காவல்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். அந்த நகரம் முழுவதும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், நூறுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பிரான்சில் இருந்து சார்டீனியா-விற்கு சென்றுள்ளனர். உள்ளூர் மாஃபியா உதவியுடன் மார்கோ ராடுவானோ தப்பித்திருக்கலாம் என கருதும் போலீசார், பொதுமக்கள் யாரேனும் அவரை கண்டால் அருகே செல்ல வேண்டாம் எனவும் உடனடியாக காவல்துறைக்கு அதுபற்றி தகவல் கொடுக்கும்படியும் தெரிவித்துள்ளனர். இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Come fa un boss mafioso a evadere da un carcere di massima sicurezza? Calandosi con le lenzuola annodate dal muro di cinta. È successo a Nuoro con la fuga di Marco Raduano pic.twitter.com/XJOyWf1OGS
— Marco Fattorini (@MarcoFattorini) February 26, 2023
மற்ற செய்திகள்