நம்ம மதுரைக்காரரு.. கானா நாட்டில் கிடைத்த பதவி.. ஆப்பிரிக்காவை கலக்கும் தமிழன்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மதுரையை சேர்ந்த தொழிலதிபரான அருண்ராஜா கானாவிற்கான இந்திய ஆப்பிரிக்க வர்த்தக கூட்டமைப்பின் கமிஷனராக பதவியேற்றிருக்கிறார்.

நம்ம மதுரைக்காரரு.. கானா நாட்டில் கிடைத்த பதவி.. ஆப்பிரிக்காவை கலக்கும் தமிழன்..!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இதுதான் சார் எங்க இந்தியா".. துருக்கியில் இந்திய பெண் ராணுவ அதிகாரியின் துணிச்சலான செயல்.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி..!

ஆப்பிரிக்க நாடான கானாவில் இந்த ஆண்டுக்கான World Pulses Day 2023 கடந்த 10 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இருநாட்டுக்கு இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்போது கையெழுத்தாகி உள்ளன. வேளாண்மை அமைச்சகம் மற்றும் இந்திய உயர் கமிஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்திய ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில் இந்த விழாவை நடத்தியது. இதில் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் அருண்ராஜா மற்றும் பல்வேறு முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

Madurai Arunraja appointed trade commissioner of IATC Ghana

Images are subject to © copyright to their respective owners.

கானாவின் விவசாய துணை அமைச்சர் யாவ் ஃப்ரிம்பாங் அடோ மற்றும் கானாவுக்கான இந்திய உயர் கமிஷனர் சுகந்த் ராஜாராம் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்ச்சியில் இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலின் உலகளாவிய தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால், மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா ஐஏடிசி தலைவர் ஜேம்ஸ் ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கானா நாட்டிற்கான இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலின் கமிஷனராக அருண்ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மதுரை மாவட்டம், மேலுார் சூரக்குண்டுவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுகுறித்து பேசிய அவர்,"IATC-கானாவின் வர்த்தக ஆணையராக, இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையே இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதே எனது குறிக்கோள். மேலும் 2023 ஆம் ஆண்டில் எங்கள் முயற்சியின் மூலம் புதிய முதலீட்டாளர்களை கண்டறியவும் இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தக வழிமுறைகளை எளிதாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

Madurai Arunraja appointed trade commissioner of IATC Ghana

Images are subject to © copyright to their respective owners.

கானா குடியரசு 1.18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்தியாவிற்கு ஏற்றுமதி உறவை கொண்டுள்ளது. இவற்றுள் தங்கம், கச்சா எண்ணெய், பருப்புகள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி பொருட்களாக இருக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் கானாவின் இந்தியாவுக்காக ஏற்றுமதி 17.2 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் கானா நாட்டிற்கான இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலின் கமிஷனராக அருண்ராஜா நியமிக்கப்பட்டிருப்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | முதல்வர் கடந்து சென்ற கொஞ்ச நேரத்தில் உடைந்து விழுந்த ராட்சத சிக்னல்.. கள ஆய்வின்போது பரபரப்பு..!

MADURAI ARUNRAJA, MADURAI ARUNRAJA APPOINTED TRADE COMMISSIONER, IATC GHANA

மற்ற செய்திகள்