வரலாற்றிலேயே முதல் முறையாக, ‘இத்தனை கோடி ரூபாய்’ ஜீவனாம்சமாக பெறும் அமேசான் நிறுவனரின் மனைவி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதன் காரணமாக, மனைவிக்கு அளித்த ஜீவனாம்சத் தொகைதான் தொழில்முனைவோர் மத்தியில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

வரலாற்றிலேயே முதல் முறையாக, ‘இத்தனை கோடி ரூபாய்’ ஜீவனாம்சமாக பெறும் அமேசான் நிறுவனரின் மனைவி!

1993 செப்டம்பர் மாதம், நாவலாசிரியர் மெக்கன்சியை காதல் திருமணம் செய்துகொண்ட அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், 1994-ஆம் ஆண்டு அமேசான் வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது ஆன்லைனின் முன்னணி வர்த்தக நிறுவனமாக பல தளங்களிலும் அமேசான் வளர்ந்து நிற்கிறது.

இந்நிலையில் 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதியர் சமீபத்தில் தங்களது விவாகரத்து முடிவினை அறிவித்தனர். ஜெப் பெசோஸின் 16 சதவீத பங்குகள் அமேசானில் இருக்கும் பட்சத்தில், அமெரிக்க சட்டத்தின்படி, மனைவிக்கு கணவர் சொத்தில் சரிபாதி பங்கிருப்பதால், ஜெப் பெசோஸின் 136 பில்லியன் டாலர் சொத்தில், பாதியான 68 பில்லியன் டாலர் சொத்து கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மெக்கன்சி 4 சதவீத பங்கினை மட்டுமே பெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.  மேலும் கணவரின் இன்ன பிற பங்குகளையும் மெக்கன்சி விட்டுக்கொடுத்துள்ளார்.

இதனால் அமேசானில் ஜெப் வைத்திருக்கும் 16 சதவீத பங்கினில் முக்கால் வாசி பணம் ஜெப்புக்கும், கால் வாசி பணம் மெக்கன்சிக்கும் பிரித்தளிக்கப்படுகிறது. அதன்படி இந்த முடிவுக்கு உடன்பட்டு இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த முடிவு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக் கூறும் மெக்கன்சி மேற்கண்ட கணக்குப்படி, இந்திய மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி சொத்தினை ஜூவனாம்சமாக பெறுகிறார்.

இதுபோக, ஜெப் பெசோஸிடம் மீதமுள்ள சொத்துமதிப்பு 6 லட்சத்து 90 ஆயிரம் கோடியாகும். ஒருவேளை ஜெப்பின் சொத்துக்களில் சரிபாதி மெக்கன்சிக்கு வழங்கப்பட்டிருந்தால், உலகின் முன்னணி கோடீஸ்வரர்களின் பட்டியலில் மெக்கன்சி இடம் பிடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சிறப்பு என்னவென்றால் வரலாற்றிலேயே முதல் முறையாக, ‘இத்தனை கோடி ரூபாய்’ ஜீவனாம்சம் பெறும் மனைவி மெக்கன்சிதான். இதே போல் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் நாவலாசிரியரும் இவராகத்தான் இருப்பார் என்றும் கருத்துக்கள் எழுகின்றன.

JEFFBEZOS, MACKENZIEBEZOS, DIVORCE, AMAZON