கல்யாண 'மோதிரத்தை' தேடியவருக்கு.. கிடைத்தது 'தங்க புதையல்'.. எவ்ளோ தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது திருமண மோதிரத்தை தொலைத்துவிட்டு தேடியவருக்கு தங்க புதையலே பரிசாக கிடைத்துள்ளது.

கல்யாண 'மோதிரத்தை' தேடியவருக்கு.. கிடைத்தது 'தங்க புதையல்'.. எவ்ளோ தெரியுமா?

இங்கிலாந்து நாட்டின் வெர்க் யாக்ஷையர் பகுதியை சேர்ந்த பால் ரேனார்ட் (44) தனது நண்பர் மைக்கேலுடன் இணைந்து நெதர்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள பாலிகேஸுக்கு விடுமுறையை கொண்டாட சென்றார். அதற்கு அருகில் அவர்களது நண்பரின் விவசாய நிலம் இருந்துள்ளது.

அப்போது பாலின் கையில் போட்டிருந்த கல்யாண மோதிரம் தொலைந்து விட்டது. உடனே நண்பர்கள் இருவரும் மெட்டல் டிடெக்டரின் உதவியுடன் மோதிரத்தை தேடினர். ஒரு இடத்தில் டிடெக்டர் வித்தியாசமாக ஒலியெழுப்ப அங்கு தோண்டிய பாலுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம். அங்கு தங்க புதையல் இருந்துள்ளது. சுமார் 84 தங்க நாணயங்கள் உள்ளே இருந்துள்ளன.

அதன் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 92 லட்சம் ஆகும். பால் இந்த சந்தோஷத்தை மைக்கேலிடம் சொல்ல, அவரும் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க ஆரம்பித்து விட்டார். ''திடீரென்று லாட்டரியில் உங்கள் நம்பர் இருப்பதை பார்த்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எனக்கும் அப்படித்தான் இருந்தது. அந்த புதையலைக் கண்டதும் எனது கைகள் நடுங்கின,'' என இதுகுறித்து பால் தெரிவித்து இருக்கிறார்.

ENGLAND