அன்று என் அம்மா 'டயானா'வை இழந்தேன்..இன்று என் மனைவியா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகல் மார்கன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை 'மெயில் ஆன் சண்டே' என்ற நாளிதழ் வெளியிட்டது.இதனால் கோபமடைந்த ஹாரி அந்த நாளிதழின் மேல் தற்போது வழக்கு தொடுத்திருக்கிறார்.

அன்று என் அம்மா 'டயானா'வை இழந்தேன்..இன்று என் மனைவியா?

இதுகுறித்து இளவரசர் ஹாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,''அரச குடும்பத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் நானும்,எனது குடும்பமும் ஊடகங்களுக்கு பதில் சொல்லவும்,அரச குடும்ப செய்திகளை அறிக்கைகளாக வெளியிடவும் கடமைப்பட்டு இருக்கிறோம்.ஆனால் சில நேரங்களில் ஊடகங்களின் செயல்பாடுகள் மனதளவில் எங்களை காயப்படுத்துவதாக இருக்கிறது.

ஊடகங்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக நாங்கள் எங்கள் நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் ஊடகங்கள் பல வதந்திகளைக் கிளம்பியதால்தான், நான் என் அம்மா டயானாவை இழந்தேன். இப்போது அதே நிலை என் மனைவிக்கும் வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரச குடும்பத்தில் பிறந்தற்காக நான் நேசிக்கும் எத்தனை பேரைத்தான் இழக்க வேண்டுமோ?

கடிதம் எழுதுவது என்பது மேகனின் தனிப்பட்ட உரிமை. ஒரு மகளாக அவர்,தன் தந்தைக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.கடிதத்தை மேகனின் அனுமதியில்லாமல் வெளியிட்டதே தவறு. அதிலும், சில திருத்தங்களைச் செய்து வெளியிட்டு, மேகனின்மீது அவதூறு பரப்புகிறார்கள்.

அரச குடும்ப வாரிசாக இல்லாமல், தனிப்பட்ட ஒரு மனிதனாக இருந்து எங்களுக்கான நியாயத்தை நீதிமன்றத்தின் மூலம் நாங்கள் தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று வெளியிட்டுள்ளார்.இளவரசர் ஹாரியின் இந்த அறிக்கை தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ENGLAND