அமேசான் காட்டுக்குள்ள தொலைஞ்சுபோன நகரம்.. 600 வருஷத்துக்கு அப்பறம் வெளிவந்த உண்மை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமேசான் காட்டிற்குள் தொலைந்து போனதாக சொல்லப்படும் பழமையான நகரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமேசான் காட்டுக்குள்ள தொலைஞ்சுபோன நகரம்.. 600 வருஷத்துக்கு அப்பறம் வெளிவந்த உண்மை..!

அமேசான் காடுகள்

உலகின் மிகப்பெரிய காடான அமேசான் பல்வேறு ஆச்சர்யங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது. வடமேற்கு பிரேசிலில் இருந்து பொலிவியா, கொலம்பியா என பல தென்னமெரிக்க நாடுகளில் பரந்து விரிந்துள்ளது இந்த பிரம்மாண்ட காடு. ஆதிகாலம் முதலே, புதிய இடங்களை தேடிச் செல்லும் வழக்கம் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது. புதிய நிலம், புதிய வாய்ப்புகள் என உலகம் முழுவதும் மக்கள் பயணித்த காரணத்தினால் பல நாடுகள் இருப்பது வெளியுலகத்திற்கு தெரியவந்தது.

Lost Cities of the Amazon Discovered Using Lasers

எல்டராடோ எனப்படும் தொலைந்துபோன தங்க நகரத்தை தேடி படையெடுத்த ஆராய்ச்சியாளர்கள் மிக அதிகம். அதே போல, அமேசான் மழைக்காடுகளுக்குள்ளும் தொலைந்துபோன நகரம் இருப்பதாக பல ஆண்டுகளாகவே நம்பப்பட்டுவந்தது.

600 ஆண்டு மர்மம்

இங்கிலாந்தை சேர்ந்த பெர்சி ஃபாசெட் என்னும் ஆய்வாளர் அமேசான் காட்டுக்குள் ஒரு தொலைந்துபோன நகரம் இருப்பதாக நம்பினார். 20 ஆம் நூற்றாண்டில் அந்த நகரத்தை தேட அமேசானுக்குள் சென்றவர் திரும்பவே இல்லை. அவர் என்ன ஆனார் என்ற தகவல்கூட கிடைக்கவில்லை. ஆனால், 600 வருட பழமையான தொலைந்துபோன நகரம் பற்றிய கதை அதன்பின்னரும் விவாதிக்கப்பட்டு வந்தது.

Lost Cities of the Amazon Discovered Using Lasers

இந்நிலையில், உண்மையாகவே அமேசான் காட்டுக்குள் இருந்த பிரம்மாண்ட நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தொழில்நுட்பம்

அமேசான் மழைக்காடுகளுக்கு மேலே 600 அடி உயரத்தில் ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டு, லேசர் தொழில்நுட்பமான Lidar-ஐ பயன்படுத்தி இந்த நகரத்தை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். தென்மேற்கு அமேசான் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் கிபி 500 முதல் 1400 வரை மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த தொழில்நுட்பம் மூலமாக, அந்நகரத்தில் இருக்கும் மொட்டை மாடிகள், நேரான தரைப்பாதைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் நீர் தேக்கங்கள் ஆகியவற்றை கண்டறிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Lost Cities of the Amazon Discovered Using Lasers

அமேசான் காட்டுக்குள் தொலைந்துபோன நகரம் குறித்து 600 க்கும் ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டுவந்த நிலையில் உண்மையிலேயே ஆய்வாளர்கள் அந்த நகரத்தை கண்டுபிடித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

AMAZON, LOSTCITY, FOREST, அமேசான், காடு, தொலைந்துபோனநகரம்

மற்ற செய்திகள்