‘சந்தோஷம் கொஞ்சநாள் கூட நீடிக்கல’... ‘உருமாற்றம் அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘சிக்கி தவிக்கும் நாடு’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டை பிரிட்டன் கடந்த வாரம் துவங்கியுள்ள நிலையில், அங்கு புதுவகை கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதன்முதலாக அங்கீகரித்து, பிரிட்டனில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடும் என்ற மகிழ்ச்சியில் திளைத்த நிலையில், அங்கு திடீரென கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகையில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டனில், லண்டன் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் 3 அடுக்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லண்டன், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், எசெக்ஸ் மற்றும் சில பகுதிகள் வரும் புதன்கிழமை முதல் மிக உயர்ந்த அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது ‘இங்கிலாந்தில் உலகத்தரம் வாய்ந்த மரபணு திறமைகள் இருக்கின்றன. அதற்கு நன்றி, கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவுகிறது.
தற்போதைக்கு, இது ஒரு மோசமான நோய் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. கொரோனா தடுப்பூசிகளால் புதிய மாறுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருந்தாலும் கூட, புதிய மாறுபாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த உருமாற்றம் தற்போதுள்ள கொரோனா வைரஸ் வகைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக ஆரம்ப ஆய்வு தெரிவிக்கிறது.
புதிய உருமாற்றம் குறித்து இங்கிலாந்து ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது. மேலும் விஞ்ஞானிகள் புதிய உருமாற்றத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்’ என மாட் ஹான்காக் கூறினார். ‘தலைநகர் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீது மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பரபரப்பான பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட சேவைகளைத் தவிர்த்து விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 3 அடுக்கு ஊரடங்கை தொடர்ந்து, மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியேவோ அல்லது தனியார் தோட்டங்களிலோ அல்லது வெளிப்புற இடங்களிலோ சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் 10 முதல் 19 வயதுடையவர்களிடையே குறிப்பிடத்தக்க கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளிகளையும் கல்லூரிகளையும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாகவே மூடிவிட்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் திறக்குமாறு அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்’ என்று லண்டன் மேயர் கூறி உள்ளார். உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த புதிய வைரஸ் பரவலை உண்மை என்று கூறியுள்ளது.
உயர்மட்ட அவசர நிபுணர் மைக் ரியான், ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி கூறுகையில், ‘இங்கிலாந்தில் 1,000 நபர்களில் பதிவான இந்த மரபணு மாறுபாடு உள்ள வைரஸ் பற்றி நாங்கள் அறிவோம்’ என்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இந்த புதிய மாற்றம், தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்பட முடியாதது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளோ அல்லது உலக சுகாதார அமைப்போ தெரிவிக்கவில்லை.
From Midnight on Wednesday morning, more areas will move into Tier 3 restrictions.
I know this is difficult news, but this action is absolutely essential to help prevent more damaging & longer-lasting problems later.
When the virus moves quickly, we must move quickly too. pic.twitter.com/QxKuwr9qs5
— Matt Hancock (@MattHancock) December 14, 2020
மற்ற செய்திகள்