'நம்மூர்ல மட்டுமில்ல'.. உலகக்கோப்பை மைதானத்துக்கு வெளியிலும் கிடைக்கும்!
முகப்பு > செய்திகள் > உலகம்மாலை நேரங்களில் காரசாரமாக எதையாவது சாப்பிட வேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற உணவுகளில் ஒன்றாக இருக்கிறது பானிபூரி. சற்று காரமாக இருந்தாலும் அதன் சுவையை பலராலும் தட்ட முடியாது என்பதால், பானிபூரிக்கு அடிமையான பலரும் உண்டு.
இந்தியாவைப் பொருத்தவரை பானி பூரி, பேல் பூரி உள்ளிட்ட கடைகளை பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் ஆங்காங்கே சாலையோரங்களில் குட்டிக் கடைகளாக விரித்து வைத்திருப்பார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில் வெளிநாட்டவர் ஒருவர், உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் பிரபலமான ஓவல் மைதனத்துக்கு வெளிப்புறம் நினு பானி பூரி விற்று வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா, ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், லண்டனின் ஓவல் மைதானத்துக்கு வெளியில் ஆங்கிலேயர் ஒருவர் பேல்பூரி தயாரித்து விற்றுக்கொண்டிருக்கும் இந்த வீடியோவை 2 ஆயிரம் பேர் ரி-ட்வீட் செய்துள்ளனர். 10 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பதிவிட்ட, அந்த பதிவர், இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சனையும் டேக் செய்துள்ளார். ஆனால் அவரும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே பானிபூரி, பேல்பூரி விற்கும் அங்குஸ் டீனான் என்கிற இந்த நபரை லண்டனின் முக்கிய சாலைகளில் பார்க்க முடிவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
At Oval yesterday during India v/s Australia Cricket Match.
भेल ले लो भाई...
😂🌸🌺🌼🌻🌸🌺🌼🌻
Please watch it. Enjoy!!!!@SrBachchan Ji. pic.twitter.com/KvgKbo46pR
— Jasmine Jani ❤️EF (@JaniJasmine) June 11, 2019