'மருத்துவ' ஊழியர் எனக்கூறிய நபரை 'வீட்டிற்குள்' அனுமதித்த 'மூதாட்டி'... அதன்பிறகு காத்திருந்த 'அதிர்ச்சி'... தேடுதல் வேட்டையில் 'போலீசார்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென்மேற்கு லண்டனை அடுத்த சர்பிட்டன் (Surbiton) என்னும் பகுதியில் உள்ள வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

'மருத்துவ' ஊழியர் எனக்கூறிய நபரை 'வீட்டிற்குள்' அனுமதித்த 'மூதாட்டி'... அதன்பிறகு காத்திருந்த 'அதிர்ச்சி'... தேடுதல் வேட்டையில் 'போலீசார்'!!!

அப்போது அந்த வீட்டிலிருந்த 92 வயது மூதாட்டியிடம், அந்த மர்ம நபர், தான் ஒரு மருத்துவ ஊழியர் என்றும் கொரோனா தடுப்பூசி செலுத்த வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மூதாட்டி, அவரை வீட்டுக்குள் நுழைய அனுமதித்தார். இதனைத் தொடர்ந்து, அந்த மூதாட்டிக்கு ஊசி ஒன்றை செலுத்திய மர்ம நபர், அதற்காக அவரிடம் இருந்து £160 (இந்திய மதிப்பில் சுமார் 16 ஆயிரம் ரூபாய்) பணத்தை வாங்கிக் கொண்டுச் சென்றுள்ளார்.

அதற்கு பிறகு தான் அது போலி தடுப்பூசி என்பதும், அந்த மர்ம நபர் ஒரு மோசடி பேர்வழி என்பதும் தெரிய வந்தது. மூதாட்டிக்கு என்ன ஊசி போடப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மோசமான பக்க விளைவுகள் எதையும் காட்டவில்லை என்பது உறுதியானது.

தடுப்பூசியின் பெயர் சொல்லி இன்னும் பல நபர்களை ஏமாற்றி அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து அந்த மர்ம நபரால் ஏற்படும் என்ற அச்சம் அப்பகுதியில் அதிகம் நிலவி வருகிறது. மர்ம ஆசாமியின் சிசிடிவி புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் அந்த மோசடி நபரை கைது செய்வது என்பது மிகவும் அவசியமான ஒன்று என்றும், இல்லையெனில் ஏதேனும் பெரியளவிலான ஆபத்துகள் ஏற்படக்  கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்