மிஸ்டர் விஜய் மல்லையா இனிமேல் அந்த பங்களால நீங்க இருக்க முடியாது! குடும்பத்தோட வெளியேறிடுங்க.. லண்டன் நீதிமன்றம் அதிரடி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டன்: பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார்.

மிஸ்டர் விஜய் மல்லையா இனிமேல் அந்த பங்களால நீங்க இருக்க முடியாது! குடும்பத்தோட வெளியேறிடுங்க.. லண்டன் நீதிமன்றம் அதிரடி

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டுவர மத்திய அரசு முயன்றுகொண்டிருக்கிறது. இந்தியாவில் சிறை சரியில்லை, கழிவறை சரியில்லை என்று ஏதேதோ காரணங்களைக் கூறி இந்தியா வருவதை மல்லையா தவிர்த்துவருகிறார். இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

London court orders Vijay Mallya to leave luxury bungalow

கொடுத்த கடனில் இருந்து கிடைத்த ஒரு பகுதி:

இந்திய வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ 9,371 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அரசு வங்கிகளுக்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் இவ்வங்கிகள் கொடுத்த கடனில் ஒரு பகுதி கிடைத்திருக்கிறது.

London court orders Vijay Mallya to leave luxury bungalow

அமலாக்கத்துறை இதுவரை இவர்களின் ரூ.18,170.02 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கைப்பற்றியிருக்கிறது. வங்கிகள் கொடுத்த கடனான ரூ.22,585.23 கோடியில் இது 80.45% ஆகும்.

சொகுசு பங்களா மீது சுவிஸ் வங்கியில் ரூ.185 கோடி கடன்:

இதற்கிடையே, லண்டன் ரிஜென்ட் பார்க் நகரில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு பங்களா மீது 2012-ல் சுவிஸ் வங்கியில் ரூ.185 கோடி கடன் பெற்றிருந்தார். 5 ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், கடனை திரும்ப செலுத்தாததால் 2017-ல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய உத்தரவிட்டு சுவிஸ் வங்கிக்கு சாதகமாக தீ்ர்ப்பு அளித்தது.

London court orders Vijay Mallya to leave luxury bungalow

பங்களாவை விட்டு வெளியேறுங்கள்:

இதனையடுத்து, சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா வெளியேறுமாறு கடந்த வருடம் அக்டோபரில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

London court orders Vijay Mallya to leave luxury bungalow

இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லண்டன் சொகுசு பங்களாவை விட்டு மல்லையா தனது குடும்பத்தோடு வெளியேற வேண்டும் என்றும், அதோடு மட்டுமல்லாமல் சுவிஸ் வங்கியிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது.

LONDON, VIJAY MALLYA, BUNGALOW, நீதிமன்றம், விஜய் மல்லையா, லண்டன், பங்களா

மற்ற செய்திகள்