LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top

431 ஊழியர்களுக்கும் போனஸ்.. 'Boss' சொன்ன அதிரடி அறிவிப்பு.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு விஷயம் தான் காரணமாம்"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று உருவான காலத்தில், தங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, பல நிறுவனங்கள் தங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.

431 ஊழியர்களுக்கும் போனஸ்.. 'Boss' சொன்ன அதிரடி அறிவிப்பு.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு விஷயம் தான் காரணமாம்"

Also Read | 64 வருஷத்துல இப்படி ஒரு மழையை யாரும் பார்த்ததில்லை.. அதுவும் 12 மணி நேரத்துல.. திணறிப்போன மக்கள்..!

இதனைத் தொடர்ந்து, தற்போது அனைத்து இடங்களிலும் நிலைமை பழையது போல ஆகி வரும் நிலையில், லண்டனை சேர்ந்த பிரபல தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளர், தனது ஊழியர்களுக்காக அதிரடி போனஸ் ஒன்றை அறிவித்துள்ளார்.

தன்னுடைய ஊழியர்களுக்கு தேவையான உத்வேகத்தை அளிப்பதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து வித உதவிகளையும் செய்வது தான் ஒரு சிறந்த முதலாளியின் வேலை.

அந்த வகையில் தான், லண்டனை சேர்ந்த தொழிலதிபரான டேரன் ஹட் என்பவர், தனது 431 பணியாளர்களுக்கு சிறப்பான போனஸ் ஒன்றை அளிக்க முன் வந்துள்ளார். இங்கிலாந்தில் பல இடங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக, நீர் தேவை, மின்சார தேவை உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் பலவும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட விஷயங்கள் ஏற்கனவே விலை உயரவும் செய்துள்ளது. பல மக்களும் இதனை சமாளிக்க முடியாமல் திணறியும் வருகின்றனர். தொடர்ந்து, குளிர் காலத்தில் இவை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தன்னிடம் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் அளிக்க முடிவு செய்துள்ளார் டேரன் ஹட் என்ற தொழிலதிபர். இதற்காக ஒரு நபருக்கு USD $236 அதிகம் அளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதன் இந்திய மதிப்பு, சுமார் 18,000 ரூபாய் ஆகும். உடனடியாக இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒரு மாத போனஸ் என்று மட்டும் இருக்காமல், அடுத்த அறிவிப்பு வரும் வரை இதனைத் தொடர்ந்து தனது 431 ஊழியர்களுக்கு டேரன் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

London boss announces bonus for all his employees

இது பற்றி பேசும் டேரன் ஹட், தனது நிறுவனம் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், லண்டனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார கட்டணம் இன்னும் உயரும் என்பதால், ஊழியர்களுக்கு போனஸ் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, தங்களின் ஊழியர்களுக்காக டெலிபோன் நிறுவனத்தின் உரிமையாளர் அறிவித்துள்ள போனஸ், பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

Also Read | "இப்படி ஒருத்தரை நான் பார்த்ததே இல்ல".. இந்திய இளைஞரை சந்தித்த எலான் மஸ்க்.. யாருப்பா இந்த பிரணாய்..?

LONDON, LONDON BOSS, LONDON BOSS ANNOUNCES BONUS, EMPLOYEES

மற்ற செய்திகள்