"இனி பணத்துல சம்பளம் கொடுக்கமாட்டேன். இனிமே அதுதான் பெஸ்ட் வழி"..CEO போட்ட புது ஆர்டர்.. திகைத்துப்போன ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு தங்கத்தில் இனி சம்பளம் அளிக்க இருப்பதாக உள்ளது. அதற்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ள விளக்கம் தான் பலரையும் வியப்படைய செய்துள்ளது.

"இனி பணத்துல சம்பளம் கொடுக்கமாட்டேன். இனிமே அதுதான் பெஸ்ட் வழி"..CEO போட்ட புது ஆர்டர்.. திகைத்துப்போன ஊழியர்கள்..!

நிதி நிறுவனம்

இங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வருகிறது டாலிமணி (TallyMoney) என்னும் நிதிநிறுவனம். 20 பேர் பணிபுரியும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கேமரோன் பெர்ரி, சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, இனி தனது ஊழியர்களுக்கு தங்கத்தில் ஊதியம் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார் கேமரோன். மேலும், அவரும் தனக்கான ஊதியத்தை தங்கமாகவே பெற இருப்பதாகவும் முடிவுசெய்து உள்ளார். இது அந்த நிறுவனத்தின் ஊழியர்களை திகைக்க வைத்திருக்கிறது.

London Based CEO will now pay his employees in gold

என்ன காரணம்?

நாட்டில் உயர்ந்துவரும் விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறுகிறார் கேமரோன். இதன்மூலம் துவக்கத்தில் இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு தங்கத்தில் ஊதியம் வழங்கப்படும் எனவும், பணமாக ஊதியம் வேண்டும் எனக் கேட்போருக்கு தங்கத்திற்கு பதிலாக பணமாகவே ஊதியமானது வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் கேமரோன்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,"நாட்டில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதுபோன்ற காலங்களில் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்கும். இதனால் மக்கள் பொருட்களை வாங்கும் அளவு குறையும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உலகம் முழுவதும் நிலையானது. ஆகவே, ஊழியர்கள் தங்களுக்கு தேவையான போது, தங்கத்தை கொடுத்து அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம். பணவீக்கம் தங்கத்தினை பாதிக்கும் அளவு மிக சிறியது என்பதால் இந்த முடிவை எடுத்தேன்" என்றார்.

London Based CEO will now pay his employees in gold

சரிவு

இங்கிலாந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணத்தின்  வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை வரலாம் எனவும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து எச்சரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்திருப்பது, அதிகரித்துவரும் பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு கேமரோன் தனது ஊழியர்களுக்கு தங்கத்தில் ஊதியம் வழங்க இருப்பதாக அறிவித்திருப்பது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

SALARY, LONDON, GOLD, லண்டன், ஊதியம், தங்கம்

மற்ற செய்திகள்