"வெளிநாடு போய் கல்யாணம் பண்ணிக்க போறோம்.." உற்சாகமா கிளம்பிய ஜோடி.. விமான நிலையத்தில் மாயமான பெண்?!.. அதிர்ச்சியில் வாலிபர்
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டன் விமான நிலையத்தில், புதிதாக திருமணம் செய்ய முடிவெடுத்த இரண்டு பேர், Rome செல்ல முடிவு செய்திருந்த நிலையில், அங்கு நடந்த எதிர்பாராத சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்த நிலையில், பின்னர் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, நிச்சயமும் செய்து கொண்ட அவர்கள், தங்களின் திருமணத்தை இத்தாலியின் ரோம் பகுதியில் வைத்து நடத்தவும் திட்டம் போட்டுள்ளனர். இதற்காக ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டு, தங்களின் நிச்சயம் முடிந்த மறுநாளே அந்த ஜோடி ரோம் செல்வதற்காக லண்டன் விமான நிலையம் சென்றுள்ளது. விரைவில் திருமணம் செய்ய போவதால், உற்சாகமாக அந்த வாலிபருக்கு விமான நிலையத்தில் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
விமான நிலையத்தில் தனது வருங்கால மனைவியுடன் இருந்த அந்த வாலிபர், அங்கே இருந்த கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர் திரும்பி வந்து வெளியே பார்த்த போது, அவரது காதலியுடன் அங்கே இருந்த அவரது பொருட்கள் மற்றும் பணமும் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால், உடனடியாக அங்கிருந்த போலீசாரிடம் அந்த வாலிபர் தகவலை தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் சோதனையையும் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, அந்த வாலிபரிடம் இருந்த சுமார் £5,000 பணமும் (இந்திய மதிப்பில் சுமார் 4.8 லட்சம் ரூபாய்) காணாமல் போனதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த பெண்ணை பார்த்து பழகி இருந்தாலும், வருங்கால மனைவி என கருதிய ஒருவர், இப்படி பொருட்கள் மற்றும் பணத்துடன் மாயமாகி போனதால், அந்த நபர் கடும் விரக்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையிலும், அந்த பெண் விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றாரா அல்லது வேறு விமானம் ஏறி, அங்கிருந்து வேறு நாட்டுக்கு சென்று விட்டாரா என்பதும் சந்தேகமாக உள்ளது. அதே போல, திருமணம் செய்வதாக கூறி பணத்துடன் மாயமானதால், அவர் பெயர் கூட உண்மையாக இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
திருமணம் செய்ய போகிறோம் என்ற ஆசையில் இருந்த வாலிபருக்கு விமான நிலையத்தில் வைத்து ஏற்பட்ட சம்பவம், கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மற்ற செய்திகள்