'வெட்டுக்கிளிகளை அழித்துவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடுமா?... அழிப்பிற்கு பின்னால் காத்திருக்கும் பேராபத்து!'.. கதிகலங்க வைக்கும் பகீர் தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் பரவல், உயிரிழப்பு, லாக்டௌனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஆம்பன் புயல், அதிக வெப்பநிலை, எல்லையில் சீனப் படைகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு பாதிப்பும் வந்துள்ளது. வடமேற்கு மாநிலங்களில் விளையும் பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்தான் அது.

'வெட்டுக்கிளிகளை அழித்துவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடுமா?... அழிப்பிற்கு பின்னால் காத்திருக்கும் பேராபத்து!'.. கதிகலங்க வைக்கும் பகீர் தகவல்!

பாகிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் குளிர்காலத்தின்போது இந்த வெட்டுக்கிளிகள் வரத்தொடங்கியுள்ளன. அங்கு குளிர்காலத்தில் தங்கியிருந்து குஞ்சு பொறித்த பிறகு அதன் அடுத்த தலைமுறைதான் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஒரு தேசிய செயல் திட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அழித்தது. மேலும், சுமார் 3,00,000 லட்சம் லிட்டர் பூச்சிக்கொல்லியை வான்வழி மூலம் தெளிக்கும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்துக்குக் காலநிலை மாற்றம் காரணமாக இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான விஷயமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருக்கும் ஹைதராபாத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் பருத்திப் பயிர்களை விளைவித்துள்ள பன்வார் என்ற விவசாயியின் பெரும்பாலான நிலங்கள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

"வெட்டுக்கிளிகள் என் பருத்தி பயிரை சில மணி நேரத்தில் மொத்தமாகக் காலி செய்வதைப் பார்த்தேன். இந்த மாத தொடக்கத்தில் என் பயிர்கள் இரண்டாவது முறையாக வெட்டுக்கிளிகளால் தாக்கப்பட்டுள்ளன. பகலில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல், இரவில் என் மா தோட்டத்தில் வௌவால்களின் தாக்குதல். இரவு பகல் என அனைத்து நேரத்திலும் கொரோனா அச்சம் என இவை அனைத்தும் எங்களை இறுக்குகின்றன. இனிமேல் நாங்கள் எங்குதான் செல்வது?" எனக் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

'வெட்டுக்கிளிகளை அழிக்க அரசாங்கத்தால் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கும் மற்றும் வனவிலங்குகள், கால்நடைகளுக்கு விஷமாக இருக்கும்' என பெஷாவர் வேளாண் பல்கலைக்கழகத்தின் விலங்கு உயிரியலாளர் சோஹைல் அகமது எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாண பகுதிகளில் உள்ள சில விவசாயிகள், வெட்டுக்கிளிகளை அழிக்க தெளிக்கப்படும் பூச்சி மருந்தால் ஏற்படும் மாற்றத்தைக் கவனித்துள்ளனர். பழத்தோட்டங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்கெனவே கிளிகள் இறந்துவிட்டதாகவும் வெட்டுக்கிளிகளை உண்ணவரும் காகங்களும் தற்போது வருவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே தான், வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

 

மற்ற செய்திகள்