VIDEO: 'நாளைக்கு நான் வேலை செய்ய மாட்டேன்!'.. 'குதூகலத்தில் நேரலையில் லீவு சொன்ன பெண் ரிப்போர்ட்டர்'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லாட்டரி சீட்டு வெற்றி பெற்ற லிஸ்டினை நேரலையில் வாசித்த, பெண் செய்தியாளர், திடீரென தன் பெயரும் அந்த லிஸ்டில் இருந்தது கண்டு, பரவசமடைந்து வாசித்த நிகழ்வு ஸ்பெயினில் அரங்கேறியுள்ளது.

VIDEO: 'நாளைக்கு நான் வேலை செய்ய மாட்டேன்!'.. 'குதூகலத்தில் நேரலையில் லீவு சொன்ன பெண் ரிப்போர்ட்டர்'.. வீடியோ!

ஸ்பெயினில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கிருஸ்துமஸை ஒட்டி லாட்டரி சீட்டு விற்பனையும் களைகட்டியது. இதில் வெற்றி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலை டிவியில் நேரலையில் ரிப்போர்ட் செய்த பெண் செய்தியாளர் நடாலியா, பொது இடத்தில் நின்றபடி, பெயர்களை வாசித்துக்கொண்டே வந்தார்.

அப்போது லாட்டரி சீட்டில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில்

தானும் இருப்பதைப் பார்த்த நடாலியா, செய்தி ரிப்போர்ட் செய்வதை நிறுத்திவிட்டார். பரவசத்திலும் குஷியிலும் கத்துகிறார். ‘நானும் லாட்டரி சீட்டு வெற்றி பெற்றிருக்கிறேன். நான் ஜோக் பண்ணல. நாளைக்கு நான் பணிபுரியப் போவதில்லை. நான் லீவு’ என்று நேரலையில்யே சொல்கிறார். அவரைச் சுற்றி மக்கள் நின்றுகொண்டிருந்தனர். ஆனால் நடாலியா எதையும் பொருட்படுத்தவே இல்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் நடாலியா, எதைப் பற்றியும் யோசிக்காமல், இதயத்தில் இருந்து உடனடியாக தனது உணர்வை வெளிப்படுத்தியதைப் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

NEWS, REPORTER, PRIZE, WIN