'வீடியோ' கால் வழியாக நடந்த அரசியல் 'மீட்டிங்',,.. ஒரே ஒரு 'செகண்ட்' நிகழ்ந்த சம்பவத்தால் வெடித்த 'சர்ச்சை'... பரபரப்பு 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்லித்துவேனியா நாட்டில் ஆன்லைன் மூலம் பாராளுமன்ற மீட்டிங் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவரின் அருகே அரை நிர்வாணத்தில் மனிதர் ஒருவர் இருந்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, லித்துவேனியாவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில், ஜஸ்டிஸ் கட்சியின் உறுப்பினராகவுள்ள பெட்ராஸ் க்ரேசுலிஸ் (Petras Grazulis) என்பவரும் கலந்து கொண்டார். அனைத்து உறுப்பினர்களும் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென ஆண் ஒருவர், சட்டை எதுவும் அணியாமல் க்ரேசுலிஸ் பின்னால் தோன்றினார்.
சுமார் ஒரு நொடி இந்த வீடியோ தோன்றி மறைந்ததைக் கண்டு மற்ற உறுப்பினர்கள் பதறிப் போயினர். உடனடியாக, இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பரவி சர்ச்சைகளை கிளப்பியது. இதன் பின்னர், அந்த வீடியோவில் இருந்தது தனது மகன் தான் என க்ரேசுலிஸ் தெரிவித்ததாக அங்குள்ள பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது. அதற்கடுத்து, அந்த வீடியோவில் உள்ளவர் ஆண்ட்ரியஸ் டாபினாஸ் (Andrius Tapinas) என்ற பத்திரிகையாளர் தான் என்று கூறினார்.
அந்த பத்திரிக்கையாளர் தன்னை அதிகம் தொல்லை செய்வதாகவும், ஆண்ட்ரியஸ் தன்னை வீடியோவில் எடிட் செய்து இணைத்து தன்னை சர்ச்சைக்குள் சிக்க முயல வைப்பதாகவும் க்ரேசுலிஸ் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த வீடியோவில் இருப்பவர், க்ரேசிலுஸ் குறிப்பிடும் பத்திரிக்கையாளர் போல இல்லை என பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அதிக பரபரப்பை கிளப்பக் காரணம், க்ரேசிலுஸ் கடந்த சில ஆண்டுகளாகவே ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர். ஓரினசேர்க்கையாளர்கள் யாராவது இருந்தால் அவர்கள் லித்துவேனியாவை விட்டு கிளம்ப வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்தார். இதனால், அவர் ஒரு ஆணுடன் இருந்த வீடியோ அதிகம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, நாட்டின் அரசியல் தொடர்பான காரியங்களை கட்சியிலுள்ள மற்றவர்களுடன் உரையாடும் போது, அதனை ரகசியமாக காக்காமல் பிற நபர்களை அறையில் க்ரேசிலுஸ் அனுமதித்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்து அவருக்கு இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்