'இந்தியர்களே.. இந்திய அரசே' .. 'மன்னிச்சிடுங்க'.. பண்றத பண்ணிட்டு.. பணிந்து போன நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பிரபல மதுபான நிறுவனம் தமது மது புட்டிகளில், இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படத்தை இடம்பெறச் செய்தது தொடர்பான புதிய சிக்கல் இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக,ராஜ்ய சபாவில் இந்திய எம்.பிக்கள் கொடுத்த வலியுறுத்தலின் பேரில், இந்திய அரசின் பிரதமர் தரப்பிலிருந்து அந்த மதுபான நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மதுபான புட்டியில் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்டதற்காக இஸ்ரேலின் அந்த மதுபான நிறுவனம் இந்தியர்களிடமும் இந்திய அரசிடமும் மன்னிப்பு கேட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மதுபானப் புட்டியில் பொறிக்கப்பட்ட காந்தியின் படத்தை உடனே நீக்குவதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் கிளார்ட் ரோர் தெரிவித்துள்ளார்.
ஆனால், காந்தியின் புகைப்படத்தை ஒரு மதுபான புட்டியில் பதிப்பித்ததற்கு உண்டான முறையான காரணத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.