சிங்க இனத்துக்கே பங்கமா.? காட்டெருமைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி அழும் காட்டு ராஜா.. உலக வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்காட்டிற்கு ராஜா என்றழைக்கப்படும் சிங்கம் மரத்தில் ஏறி நிற்கும் வினோத வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிங்கம்
காடுகளில் வாழும் தனித்துவமான விலங்கினங்களில் சிங்கமும் ஒன்று. பொதுவாக ஆண் சிங்கங்கள் ஒன்பது அடி நீளம் வரை வளரும். இதன் வால் மட்டும் 3 அடி இருக்குமாம். 3.5 அடி வரையில் சராசரியாக வளரக்கூடிய சிங்கம் 550 பவுண்ட் எடை கொண்டதாக இருக்கும். இது 12 அடி உயரத்திலும் 40 அடி பள்ளத்தில் தாவக் கூடிய வலிமையை பெற்றிருக்கிறது. பொதுவாக பெண் சிங்கங்கள் வேட்டைக்குச் செல்ல குட்டிகளை பராமரிக்கும் பணியை மட்டுமே ஆண் சிங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. சிங்கம் என்றவுடன் கர்ஜித்து, இரையை வேட்டையாடும் காட்சிகள்தான் நமது நினைவில் வந்து போகும். ஆனால் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் இந்த வீடியோவில் சிங்கம் ஒன்று மரத்தில் ஏறி நிற்கிறது.
மசாய் மாரா
கென்யா நாட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற மசாய் மாரா வனப்பகுதியில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூர் பழங்குடியினரான மசாய் மக்களின் பெயரையே இந்த காட்டிற்கு சூட்டியுள்ளது அந்நாட்டு அரசு. இங்கே அதிக அளவில் ஆப்பிரிக்க சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் யானைகள் காணப்படுகின்றன. இவற்றைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா வாசிகள் இந்த மசாய் மாரா வனப் பகுதிக்கு செல்வது வழக்கம். அப்படி ஒருவர் செல்லும்போதுதான் இந்த சிங்கம் மரத்தில் ஏறி நின்றிருக்கிறது.
காட்டெருமைகளின் படையெடுப்பு
இந்த வீடியோவில் ஆப்பிரிக்க சிங்கம் ஒன்று மரத்தில் பாதி ஏறியபடி கஷ்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைச் சுற்றிலும் ஏராளமான காட்டெருமைகள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த வீடியோ வைரலானதும் காட்டெருமைகளுக்காக காட்டு ராஜா மரத்தில் ஏறலாமா? என்ற ரீதியில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுவாக ஆப்பிரிக்க சிங்கங்கள் இப்படி மரத்தில் ஏறுவது அபூர்வமாகும். அதனாலேயே நெட்டிசன்கள் ஆர்வத்துடன் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்