'விண்ணில் ஏவப்பட்ட 10வது நொடியில், ராக்கெட்டை தாக்கிய மின்னல்'.. பதறவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவின் சோயுஸ்- 2.1பி வகை ராக்கெட் ஒன்று செயற்கைக் கோள்களுடன் வானில் செலுத்தப்பட்டவுடனேயே மின்னல் தாக்கிய சம்பவம் வீடியோவில் பதிவாகி வைரலாகியுள்ளது.

'விண்ணில் ஏவப்பட்ட 10வது நொடியில், ராக்கெட்டை தாக்கிய மின்னல்'.. பதறவைக்கும் வீடியோ!

கிளானோஸ்-எம் என்னும் செயற்கைகோளை எடுத்துக்கொண்டு கடந்த திங்கள் அன்று, ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி (Soyuz-2.1b) என்னும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்கிற ஏவுதளத்திலிருந்து அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 10 விநாடிகளில் திடீரென மின்னல் தாக்கியதால் பரபரப்பு உண்டானது.

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில் இதுபோன்று மின்னல் உண்டான அதே சமயம், ராக்கெட்டுக்கு எந்த பாதிப்பும் உண்டாகவில்லை என்றும்,  மிஷன் வெற்றியாக முடிந்தது என்றும், இந்த மின்னல் ரஷ்யாவின் ராக்கெட் ஏவப்படுவதற்கான தடையாக இல்லை என்பதற்கு இதுவே சாட்சி என்றும் ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல் 1969-ல் நாசாவின் அப்போலோ-12 மிஷனில், மனிதர்களைக் கொண்டுசென்ற டாட்டர்ன்-வி என்கிற பெரிய ராக்கெட்டை இரண்டு முறை மின்னல் தாக்கியும் எவ்வித பாதிப்பும் உண்டாகாமல் ராக்கெட் சென்றது. உலோகங்களை மின்னல் ஈர்க்காது என்பதை அறிந்தே ராக்கெட்டுகள் வடிவமைக்கப்படுவதால் இவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து ராக்கெட்டுகள் தப்புவதாகக் கூறப்படுகிறது.

எனினும் சோயுஸ்-2.1பி வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.

RUSSIA, SOYUZ, ROCKET, BIZARRE