‘கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில்’.. ‘20 பேர் பலியான சோகம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானில் பெய்து வரும் கடுமையான மழையால் சிந்து மாகாணத்தில் மின்னல் தாக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

‘கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில்’.. ‘20 பேர் பலியான சோகம்’..

இதுகுறித்து ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிகளில் புதன் அன்று பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அப்போது தார்பர்கர் மாவட்டத்தில் மிதி, சாச்சி மற்றும் ராம் சிங் சோடோ ஆகிய கிராமங்களில் மழையின்போது மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கிய பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான விலங்குகள் உயிரிழந்துள்ளன.

புதன் கிழமை இரவு மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருந்த நிலையில், வியாழக்கிழமை பெய்த கடும் மழையில் மின்னல் தாக்கி 10 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மின்னல் தாக்கியதில் காயமடைந்த 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PAKISTAN, HEAVYRAIN, LIGHTING, DEAD