இருண்ட 'சுரங்கப்பாதையில்' சிறு வெளிச்சம்... கொரோனா 'கோரத்தாண்டவம்' ஆடிய... இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் 'தற்போதைய' நிலை என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் தற்போது கொரோனா தொற்று சற்றே குறைந்து அம்மக்களை சற்றே ஆசுவாசம் கொள்ள வைத்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகின் சொகுசு நாடுகளில் ஒன்றான இத்தாலி (16,523 மரணங்கள்) நாட்டில் வெகுவாக கோரத்தாண்டவம் ஆகிவிட்டது. இதேபோல ஸ்பெயின்(13,341), ஜெர்மனி(1,810), பிரான்ஸ்(8,911) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. உலகளவில் கொரோனா தொற்றால் இறந்தவர்களில் மேற்கண்ட ஐரோப்பிய நாடுகளை சார்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்து அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் கொரோனாவால் ஏப்ரல் 2-ம் வாரம் வரையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கொரோனா ஆடிய கோர ஆட்டத்தால் இந்த லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
குறைந்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ , ''ஒரு இருண்ட சுரங்கப்பாதையில் தூரத்தில் ஒளியைக் காணத் தொடங்கியுள்ளோம்,'' என்று தெரிவித்து இருக்கிறார். விரைவில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து அனைத்து நாடுகளும் மீண்டு வர வேண்டும் என்பதே தற்போது ஒட்டுமொத்த உலக மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. விரைவில் அது நடைபெறும் என்று நம்புவோம்!