'எலி மட்டும் இல்ல'... 'ஊழியர்களுக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி'... 'பாழான பிரபல ஷாப்பிங் மால்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாகப் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் பூட்டப்பட்ட 25 நாட்களிலேயே திரையரங்குக்குள் புகுந்த எலிகள், அங்கிருந்த சொகுசு இருக்கைகள், சவுண்ட் சிஸ்டம், மின்சார ஒயர்கள் போன்றவற்றைக் கடித்துச் சேதப்படுத்தியது. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் ஊரடங்கின் காரணமாக மலேசியாவில் உள்ள பிரபல மால்களில் ஒன்றான மெட்ரோ ஜெயா மாலும் கடந்த மார்ச் 18ம் தேதி மூடப்பட்டது. இதனால் குளிர்சாதன வசதியும் நிறுத்தப்பட்டது. இதனிடையே மால் மீண்டும் திறக்கப்பட்டுக் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அங்கிருந்த பிரபல தோல் பொருட்கள் விற்பனை நிலையத்தை மீண்டும் திறந்து பார்த்தபோது, அங்கிருந்த கைப்பைகள், ஷூ, தோல் பை உட்படத் தோல் பொருட்கள் அனைத்தும் புஞ்சை பிடித்து குப்பையில் வீசப்பட்ட பொருட்களைப் போன்று காட்சியளித்தன.
இதனைப் பார்த்து அதிர்ந்து போன ஊழியர்கள், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் 10 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எனத் தெரிவித்தார்கள். 50 நாட்களாகக் குளிர்சாதன வசதி நிறுத்தப்பட்டதால் தோல் பொருட்கள் மீது புஞ்சை படியும் சூழ்நிலை உருவானது. தற்போது அந்த பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் ஊரடங்கிற்குப் பிறகு மால்கள் திறக்கப்படும் பட்சத்தில், இங்குள்ள தோல் பொருட்களுக்கும் இதே நிலை தான் வருமோ என உரிமையாளர்கள் பலரும் அச்சம் தெரிவித்துள்ளார்கள். அதோடு மால்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கு முன்பு, அங்குள்ள குளிர்சாதன குழாய்கள் வழியாக நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பலரும் கூறியுள்ளார்கள்.