'இந்த நேரத்துலயா இப்படி நடக்கணும்???'... 'திவாலாகும் இரு பெரும் நிறுவனங்கள்?!!'... 'கலங்கி நிற்கும் 25,000 ஊழியர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டு முக்கிய ரீடைல் நிறுவனங்கள் வர்த்தகச் சரிவை தாக்குப்பிடிக்க முடியாமல் திவாலாகியுள்ளதால் 25,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர்.
பிரிட்டனில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பொருளாதாரமும் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதையடுத்து பைஃசர்- பயோன்டெக் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்து, அடுத்த வாரமே பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்நிலையில்தான் பிரிட்டனின் 2 முக்கிய ரீடைல் நிறுவனங்கள் வர்த்தகச் சரிவை தாக்குப்பிடிக்க முடியாமல் திவாலாகியுள்ளது. இதன்காரணமாக சுமார் 25,000 பேர் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் நீண்ட காலமாக ரீடைல் சந்தையில் ஆடை விற்பனை செய்யும் Debenhams மற்றும் Arcadia எனும் அந்த 2 நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகப் போட்டியை தாக்குப்பிடிக்க முடியாமலும், கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளைச் சமாளிக்க முடியாமலும் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த 2 பிராண்டுகளின் முடக்கத்தால் பிரிட்டனில் சுமார் 25,000 ஊழியர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ரீடைல் ஆடை விற்பனை சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், நிறுவனத்தைக் காப்பாற்ற போதுமான நிதியும் கிடைக்காத காரணத்தால் வர்த்தகம் மூடப்படுவதாக Debenhams தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் மூடப்படுவதால் சுமார் 12,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர். அதேபோல கொரோனா பாதிப்புக்கு முன்பே மோசமான வர்த்தக நிலையை எதிர்கொண்டு வந்த Arcadia நிறுவனம் கொரோனாவிற்குப் பின் ஏற்பட்டுள்ள அதிகளவிலான பாதிப்புகளால் நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மூடப்படுவதால் சுமார் 13,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர். பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் 2 பெரும் நிறுவனங்கள் இந்த மோசமான நிலைக்கு சென்றுள்ளது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்